IPL 2026.. ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : டெல்லி கேபிடல்ஸ்.. குஜராத் டைட்டன் அணிகள் இன்று மோதல்
டில்லி : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் டில்லி கேபிடல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோத உள்ளன. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 07.30 மணிக்கு துவங்க உள்ளது.
2026ம் ஆண்டிற்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 28ம் தேதி துவங்கியது. மொத்தம் 70 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதுவரை 13 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று நடைபெறும் 14வது போட்டியில் டில்லி கேபிடல்ஸ் அணியும், குஜராத் டைட்டஸ் அணியும் மோதுகின்றன. டில்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இரவு 07.30 மணிக்கு இந்த போட்டி துவங்க உள்ளது.
இதுவரை விளையாடி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று டில்லி கேபிடல்ஸ் அணி 4 புள்ளிகளுடன், தரவரிசை பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. ஆனால் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்த குஜராத் டைட்டஸ் அணி அணிகளின் தரவரிசை புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இதனால் இன்றைய போட்டி இரண்டு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்புடன் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
டில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் ஏற்கனவே ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ளன. இன்றைய நிலவரப்படி, இந்த போட்டியில் இரு அணிகளுக்குமே வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு சம அளவில் உள்ளது. இதனால் எந்த அணி வெற்றி பெற போகிறது என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.