குழந்தை.. ஒரு ஈர்ப்பு சக்தி!

Su.tha Arivalagan
Jun 10, 2026,04:22 PM IST

- இரா. மும்தாஜ் பேகம் 


தூக்கத்தில் துப்பாக்கி நீட்டியது யார்

விம்மும் குழந்தை

பூக்களை தூவியது யார் 

புன்னகை செய்யும் 

கைகளை நீட்டியதும்

காந்தம் ஈர்க்கும்




பளபளக்கும் கண்களில் பட்டாம்பூச்சி பறக்கும்

நெஞ்சில் தவழவிட்டால் பஞ்சுபோல் லேசாகும் மனம்

பிஞ்சு விரல்கள் பட்டால் 

மின்சார சாட்டை நெஞ்சை சொடுக்கும்

புன்னகை சிந்தும் போது

புவியீர்ப்பு  விசையே செயலற்று போகும்

மலர் பாதங்கள் மண்ணில் தடம் பதிக்கும்போது

விண்மீன்கள் கண்சிமிட்டிபார்க்கும்


(இரா. மும்தாஜ் பேகம், கிரியேட்டிவ் ரைட்டர், திருச்சி)