Thursday Thoughts: உடையாத வரை ஒரு முகம்.. உடைந்து விட்டால் பல முகம்!
- இரா. மும்தாஜ் பேகம்
பணத்தை சிக்கனமாக பயன்படுத்தினால் வாழ்க்கை இனிக்கும். வார்த்தையை சிக்கனமாக பயன்படுத்தினால் உறவுகள் நிலைக்கும்.
--
எல்லா உறவுகளும் கண்ணாடி போல தான் உடையாத வரை ஒரு முகம் தெரியும் உடைந்து விட்டால் பல முகம் தெரியும்.
--
கல்வி அறிவு இல்லாதவர்கள் இடையே கற்றவர் இருப்பது பிணங்களிடையே உயிர் உள்ளவன் இருப்பது போல.
--
ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் விதை நெல்லை போன்றது. விதை நெல்லுக்கு கணக்கு பார்த்தால் விளைச்சலே இருக்காது.
--
கற்றுத் தெளிவது கல்வி. பட்டுத்தெளிவது அனுபவம் கற்றது மறந்தாலும் பட்டது மறக்காது.
--
பிறவி திறமையை வளர்ப்பதற்காகவே நம் கல்வியறிவு பயன்பட வேண்டும். பிளாட்டோ
--
இளமைக்காலத்தில் கல்வியை புறக்கணித்தவர்கள் முக்கால வாழ்க்கையையும் இழந்தவர்கள் ஆவார்கள்.
--
பிழைகளும் தோல்விகளும் இல்லாமல் வாழ்க்கை இல்லை. கல்வி ஒன்றே தோல்விகளை எதிர்கொள்ளும் சக்தியை தரும் ஆயுதம்.
--
எடுத்தால் குறைவது செல்வம் கொடுத்தால் வளர்வது கல்வி.
--
வாழ்வில் பலரின் உண்மையான நிறங்களை அறிந்து கொள்ள ஒரு காலம் வர வேண்டும்.
(இரா.மும்தாஜ் பேகம், திருச்சி, கிரியேட்டிவ் ரைட்டர்)