காத்திருப்பது சரியா!
Aug 24, 2026,04:10 PM IST
- பா.பானுமதி
கோடை வெயில் கொளுத்தியது
பச்சைக்கிளி பரிதவித்தது...
வாடைக்காற்று வறட்சியுடன் வீசியது
பச்சைக் கிளி வதங்கியது...
இலையுதிர் காலம் இம்சை செய்தது
பச்சைக்கிளி இளைத்து விட்டது...
இருக்க இடம் இன்றி இங்கும் அங்கும் ஓடியது...
காத்திருந்து காத்திருந்து கண்கள் பூத்தன...
கவலையில் கணங்கள் கரைந்தன...
காலம் மாறியது வசந்த காலம் வந்தது
வாழ்க்கை தேறியது...
வண்ணங்கள் வந்தது
நல்ல எண்ணங்கள் தந்தது...
கிஸ் கிச் என்ற ஒலி
இன்னிசையாய் ஒலித்தது...
காத்திருந்தால் காலம் வசப்படும்
காய் கனியாகும் கவலைகள் கரைந்திடும்...
பூக்கள் பூத்து புன்னகைக்கும்
வேர் விட்டு விருட்சம் வளரும்...
கிளியின் மகிழ்ச்சி போல் நம் மனங்களிலும் மணம் வீசும்...
காலம் வரை காத்திரு... கவிதை எழுதும் வாழ்க்கை...
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)