போராடும் அதிமுக-திமுக: சீனியர்களின் தோல்விக்கு SIR காரணமா?

Su.tha Arivalagan
May 04, 2026,04:24 PM IST

சென்னை : தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் ஏறக்குறைய வெளியாகி விட்டன. இதுவரை வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின் படி விஜய்யின் தவெக அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதை விட அதிர்ச்சி தரக்கூடியது தற்போது முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலின், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் என சீனியர்கள் பலரும் தோல்வி அடைந்ததுடன், பல தொகுதிகளில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.


திமுக.,வில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், எ.வ.வேலு உள்ளிட்டோர், அதிமுக.,வில் ஆர்.பி.உதயக்குமார், ஜெயக்குமார் உள்ளிட்ட சீனியர்கள் பலரும் தோல்வியை சந்தித்துள்ளனர். இவர்கள் அனைவரும் அவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் தொடர்ந்து பலமுறை எம்எல்ஏ.,க்களாக இருந்து, அமைச்சர்களாகவும் இருந்தவர்கள். இருந்தும் இந்த முறை தோல்வியை சந்தித்துள்ளதற்கு விஜய் அலை ஒரு காரணம் என்றாலும், எஸ்ஐஆர்  மிகப் பெரிய காரணம் என சொல்லப்படுகிறது.




எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகு தமிழகத்தில் ஏறக்குறை 1.5 கோடி போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அதிகபட்சமாக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் 1.75 லட்சம் போலி வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டது. இது போல் பல முக்கிய தொகுதிகளில் போலி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதும் அதிமுக, திமுக.,விற்கு விழும் பாரம்பரிய ஓட்டுக்கள் பறிபோனதால் இந்த முறை இரு கட்சிகளுமே மிகப் பெரிய அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளது என சொல்லப்படுகிறது.