மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் காலதாமதமா? ஆளுநர் மாளிகை விளக்கம்

Meenakshi
Nov 07, 2025,05:12 PM IST

சென்னை: தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் எந்த தாமதமும் இல்லை. 13% மனுக்கள் குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. கடந்த 3 மாதங்களுக்குள் 95% மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.


சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களை  கிடப்பில் போட்டு, ஆளுநர் தாமதப்படுத்துவதாக தமிழக அரசு குற்றம்சாட்டு வைக்கப்பட்ட, நிலையில் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், 


இந்திய அரசியலமைப்பின் விதிகளின்படி தமிழ்நாடு ஆளுநர் செயல்பட்டு வருகிறார்.


தமிழக மக்களின் நலன்களைப் பாதுகாக்க, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த கவனத்துடன் ஆய்வு செய்து வருகிறோம்.




மக்கள் நலனுக்கு எதிரான சில ஆதாரமற்ற, உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.


2025 ஆம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி வரை பெறப்பட்ட மசோதாக்களில் 81 சதவீதம் ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


குடியரசு தலைவரின் பரிசீலனைக்காக 13 சதவீதம் மசோதாக்கள் அனுப்பப்பட்டுள்ளன.


கடந்த 3 மாதங்களுக்குள் 95 சதவீதம் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் தாமதம் செய்து வருவதாக அரசு வைக்கும் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.