புலனமே.. நீ வரமா இல்லை சாபமா!
க.யாஸ்மின் சிராஜூதீன்
அலைபேசியிலே உலாவரும்
உறக்கம் இல்லா தபால்காரர்...
செய்திகளை சுமந்து அலையிலே
வந்திடுவான்....
கண்ணிமைக்கும் கணத்திலே
தந்திடுவான்....
புலனத்திலே கைவிரல்கள் ஆட்டம் போட....
கண்ணிமைக்காமல் பார்வை அதிலேஆழ....
பார்வைக் குறைபாடு வருமென்று
தெரிந்தும்..தவிர்க்க முடியா அலைபேசியின் அலையே....
நீ வரமா இல்லை சாபமா....
சாப்பாடு கூட இல்லாமல் இருப்பரே
புலனம் பார்க்காமல் இருப்பவர் உளரோ....
நிமிடத்திற்கு நிமிடம் கண்கள் தேடும்
புலனத்தில் செய்தியை....
.ஓய்வில்லா தபால்காரனாய் புலனம் அலைபேசி வாசலிலே ....
கையில் ஏந்திப் படிக்கும் தபாலில்
உள்ள இன்பம் எங்கே தொலைந்து
போனதோ ...
அலைபேசி புலனம் வெற்றி கொண்டதோ...
வருகுதோ...
நன்மை தீமை இரண்டும் உண்டு
நாம் அறியனும்...
தேவைக்கு பயன்படுத்தி தேகம்
காக்கனும்....
அறிவியல் வளர்ச்சி வளமாக்குமே
வாழ்கை சிறக்க பயன்படுத்தி
பயனடைவோமே....!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)