ஈரான் மீது வான்வழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்!
டெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர் வான்வழித் தாக்குதலை தொடங்கியுள்ளனர்.
ஈரான் தலைநகர் தெஹ்ரான் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் இணைந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து, இந்த தற்காப்புத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
தெஹ்ரானில் உள்ள முக்கிய ராணுவ நிலைகள், பல்கலைக்கழக வீதி மற்றும் ஜொம்ஹூரி ஆகிய பகுதிகள் இலக்கு வைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதல் அமெரிக்காவுடன் இணைந்த கூட்டு ராணுவ நடவடிக்கை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரானின் பதில் தாக்குதலுக்குத் தயாராகும் வகையில், இஸ்ரேல் நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஈரான் ராணுவம் இந்தத் தாக்குதலுக்குக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஒரு முழு அளவிலான போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச நாடுகள் அமைதி காக்குமாறு இரு தரப்பையும் வலியுறுத்தி வருகின்றன.