விண்வெளியில் இந்தியாவின் வரலாற்று சாதனை.. புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை செலுத்தியது
ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ISRO, புவி கண்காணிப்புக்கான EOS-05 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது.
இந்திய விண்வெளித்துறை வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல்லாக இது பார்க்கப்படுகிறது.
புவிசார் சுற்றுவட்டப்பாதை Geosynchronous Orbit-இல் நிலைநிறுத்தப்பட்ட இந்தியாவின் முதல் அதிநவீன இமேஜிங் செயற்கைக்கோள் இது என்பதால் இஸ்ரோவுக்கு இது தனிப்பட்ட முறையில் மிகப் பெரிய முக்கியத்துவம் வாய்ந்த செயலாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் எல்லைகள், இயற்கை பேரிடர்கள் (புயல், வெள்ளம்) மற்றும் விவசாய நிலங்களை உடனுக்குடன் (Real-time) கண்காணிக்கும் திறனை இந்த செயற்கைக் கோள் இந்தியாவிற்கு வழங்குகிறது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து GSLV ராக்கெட் மூலம் இது வெற்றிகரமாக இன்று காலை இந்த செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டது.
விஞ்ஞானிகளின் இந்த சாதனைச் சம்பவத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.