மறைந்தாலும் நன்று...!

Su.tha Arivalagan
Aug 22, 2026,11:12 AM IST

- பா. பானுமதி


மண்ணுக்குள் மறைந்தாலும் மக்கி போக மாட்டேன் 

மலர்ந்து வருவேன் மலர்களாக 


மனம் விரும்பும் கனிகளாக 

உயிர்களை உயிர்க்க செய்யும் உணவாக

விதைகள் 


வானில் மறைந்தாலும் வருந்த மாட்டேன் 

மறுபடி மறுபடி வருவேன் மண் மணக்கச் செய்யும் மழையாக போவேன் 

நுண்ணுயிர் எல்லாம் செழிக்க செழிக்க செய்வேன் 

மேகம்




காற்றில் கலந்தாலும் மறைந்து விட மாட்டேன் 

மணம் பரப்புவேன் 

மலர்ச்சோலைகளுடன் மயக்கும் கனித் தோட்டங்களுடன் உறவாடுவேன் 

மகரந்தம் 


மறந்தாலும் மற்றொரு வடிவில் உயிர்த்தெழுந்து உறவாடுவேன்


(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)