மல்லிகைப் பூ.. அல்ல அல்ல.. மாயப்பூ!
Oct 06, 2026,01:25 PM IST
- ஜெ.லீலாவதி
வேலைக்கு போகும் கணவனை
வாசல் வரை வந்து வழியனுப்பி
கதவோரம் சாய்ந்து
சிறு பிள்ளைபோல் கையசைத்து
கனவுகளாய் சில நிமிடம்
அவன் திரும்பும் வரை
தனக்காக அந்த கதவோரம்
நின்றிருப்பாள் என
அவனுக்கு தெரியாதா?
அவனும் கையசைக்கவே
துள்ளி குதித்தாள் சிறு பிள்ளையாய்
புரிந்து கொண்டான்
அந்த மல்லிகைபூவுக்கு இத்தனை வரவேற்பா?!
அவனும் மெல்ல சிரித்து
காதலை கண்களால் காண்பித்து
சென்றான் சிறு வெட்கத்தோடு