காலை சக்கரம்!

Su.tha Arivalagan
Oct 07, 2026,02:40 PM IST

- கவிச்சுடர் ஜெ. லீலாவதி, மேட்டுப்பாளையம்


வாழ்க்கை அழகாக ஆரோக்கியமாக அர்த்தமுள்ளதாக 

ஆசிர்வாதமாக வாழ

கற்றுத் தரும் பொக்கிஷம் காலை சக்கரம் 


காலை கதிரவன் துயில் எழுவதற்க்குள் 

காலை சக்கரம் என்ற ரதம் நம் இல்லத்தில் 

அத்தேரை தொடர்ந்து நிறைய அனுபவமிக்க ஆசான்கள் 

கற்றுத் தெளியவேண்டியது நாம் தான் 


காலை தொடக்கம் அழகான உடற்பயிற்சி

அங்கங்களின் வலி நிவாரணி தினம் 




தினம் ஒரு முத்திரை 

நாள் முழுவதும் உற்சாக இருக்க 

தினம் ஒரு சிந்தனை 


மேனியை குளிர்விக்க ஒரு 

எண்ணெய் குளியல் 


பிரபஞ்சத்திடம் போராடி வேண்டியதை பெற 

தியானம்......  


ஆசான்களிடம் கேட்டுப் 

பெறுவது தெளிவு


நம் வாழ்வை அழகாக மாற்ற

தேவை 

காலை சக்கரம்