ஜெகதீப் தன்கர் ராஜினாமாவிற்கு அவரது உடல்நிலையே காரணம்.. வேறு காரணம் இல்லை: அமித்ஷா விளக்கம்!
டெல்லி: உடல்நலக் காரணமாகவே முன்னாள் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார். வேறு காரணம் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
இந்தியாவின் துணை ஜாதிபதியாக பதவி வகித்த ஜெகதீப் தன்கர் கடந்த மாதமக திடீரென தனது பதவியை ராஜிமா செய்தார். அது குறித்த கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு வழங்கினார். அந்த கடிதத்தில், உடல் நலனை முன்னிட்டும், மருத்துவ காரணங்களுக்காகவும், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 67(a)-ன் படி, இந்திய துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமாசெய்கிறேன். எனது பதவி காலத்தில் ஜனாதிபதி எனக்கு அளித்த உறுதியான ஆதரவிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இவரது திடீர் ராஜினாமா குறித்து எதிர்க்கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இது குறித்து ஜெகதீப் தன்கர் எந்த கருத்தையும் வெளியிட வில்லை. அது மட்டும் இன்றி அவர் எந்த பகுதியில் இருக்கிறார் என்பது கூட தெரியாத நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இதுபற்றி தேவையற்ற குழப்பம் ஏற்படுத்த வேண்டாம். ஜெகதீப் தன்கர் அரசியல் சாசன பதவி ஒன்றை வகித்தவர். அவர், தன்னுடைய பதவி காலத்தின்போது, அரசியல் சாசனத்தின்படி சிறந்த முறையில் பணியாற்றியவர். அவருடைய உடல்நல பாதிப்பு காரணமாக தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். இந்த விசயத்தில் நீண்ட ஆராய்ச்சி செய்ய யாரும் முயற்சிக்க வேண்டாம். உடல்நலம் சார்ந்த விசயத்திற்காக தான் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்துள்ளார். தமது பதவிக்காலத்தில் அரசியலமைப்பு விதிப்படி தன்கர் சிறப்பாக பணியாற்றினார் என்று அவர் தெரிவித்துள்ளார்.