தன்னம்பிக்கை பேச்சாளர்.. கை நிறைய விருதுகள்.. 600 புக்ஸுடன் வீட்டிலேயே லைப்ரரி.. அசத்தும் ஜெய்சக்தி
வாழ்க்கை ஒவ்வொருவரையும் எந்தப் பாதையில் வழி நடத்தும் என்பதை நாம் கணிக்கவே முடியாது. ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒரு பாதை நிச்சயம் உண்டு. அந்தப் பாதையை சரியாக உணர்ந்து அதில் நுழைந்து நடை போட ஆரம்பித்தால் வெற்றிக் கனியை சுவைப்பதை யாராலும் தடுக்கவே முடியாது.
அப்படிப்பட்ட ஒருவர் தான் திருமதி ஜெய்சக்தி பாலாஜி. இவரது கதை பிரமிக்க வைக்கிறது. பெண்களுக்கு கல்வி முக்கியம் என்பார்கள். கூடவே, தன்னம்பிக்கையும் மிக மிக முக்கியம். இந்த இரண்டையும் கையில் எடுத்து கலக்கிக் கொண்டிருக்கிறார் ஜெய்சக்தி பாலாஜி.
ஜெய்சக்தி பாலாஜியிடமே அவரைப் பற்றிக் கேட்டோம்.. ஒவ்வொரு பெண்ணுக்கும் ரோல்மாடலாக அவர் திகழ்வதை அவரது பேச்சிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.. இனி ஓவர் டூ ஜெய்சக்தி..
நான் திருமதி.ஜெய்சக்தி பாலாஜி. கணவர் பெயர் திரு. பாலாஜி. எனக்கு இரு பிள்ளைகள். எனது ஊர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம். படிப்பு BA ஆங்கிலம்.கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலமாக தமிழ் நந்தவனம் என்னும் வாட்சப் குழுவில் இணைந்து திருக்குறள் பயிற்சி அளித்துள்ளேன்.தொல்காப்பிய நிகழ்வை தொகுத்துள்ளேன். மேலும் அஞ்சல் அட்டையில் திருக்குறள் எழுதி முப்பால் விருது பெற்றுள்ளேன்.இணைய வழியில் நடந்த திருக்குறள் வாசித்தல் போட்டியில் கலந்து கொண்டேன்.
திருக்குறள் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு திருக்குறள் சுடர் சான்று பெற்றுள்ளேன். குறள் மொழி காவலர் விருது பெற்றுள்ளேன்.
சிந்தனை சிறகுகள் நாகை சங்கமம் மற்றும் இன்னர்வீல் சங்கம் நாகை வழங்கிய மகளிர் தின விருது-2024 வாங்கி உள்ளேன்.இன்னும் சில நிகழ்வுகளில் கலந்து கொண்டு மெடல் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளேன்.
இவ்வளவு பண்றீங்களே.. இதைத் தாண்டி என்ன பண்ணுவீங்க?
எனக்கு சிறந்த பொழுதுபோக்கு வண்ணம் தீட்டுதல் ஆகும். எனக்கு வாசிக்கும் பழக்கம் உண்டு. நிறைய தமிழ் புத்தகங்கள் வாசித்து உள்ளேன். மேலும் இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கி நூல் விமர்சனமும் எழுதி உள்ளேன்.என் வீட்டில் 600க்கும் மேற்பட்ட புத்தகங்கள் கொண்ட சிறிய நூலகம் வைத்து உள்ளேன். நூல் விமர்சனம் எழுதி சான்றிதழ் பெற்றுள்ளேன்.
2024ளில் தன்னம்பிக்கை பேச்சாளர் ஆவதற்கு பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றேன். அரசு பள்ளிகளுக்கு சென்று 1000 க்கும் மேற்பட்ட மாணவர்களிடயே பேசியுள்ளேன். என் மகளின் முதல் பிறந்தநாளை முடித்து விட்டு கூட நான் பயிற்சிக்கு சென்றேன். அதற்கு உறுதுணையாக என் கணவர் நின்றார்.
தற்போது Karpagavriksham என்னும் பெயரின் கீழ் ஆன்லைனில் பெண்களுக்கும், மாணவர்களுக்கும் பயிற்சி அளித்துகொண்டுள்ளேன். என்னுடன் இணைந்து என் தம்பி குகன் KarpagaVriksham இணைய பக்கத்தை பார்த்துக்கொள்கிறார்.
சரி வேறு எதில் எல்லாம் உங்களுக்கு இன்டரஸ்ட் உண்டு?
பெண்களுக்கு அதிகம் பிடித்த விஷயங்களில் கோவில்களுக்கு செல்வதும் உண்டு. எனக்கும் கோவில்களுக்கு செல்வது
மிகவும் பிடிக்கும்.
இதுதவிர திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் நடத்திய திருவாசகம் முற்றும் எழுதும் உலக சாதனை நிகழ்வில் கலந்துகொண்டு சான்றிதழ் பெற்றுள்ளேன். மேலும் பல சான்றிதழ் பெற்றுள்ளேன். தபால் தலைகள் சேர்த்து உள்ளேன். நிறைய மொழிகள் கற்றுக்கொள்ள பிடிக்கும். Sharemarket செய்கிறேன். 2025 ல் சங்கராபுரம் வாசவி கிளப் வனிதா சங்க தலைவராகவும், 2025-2026 சங்கராபுரம் இன்னர்வீல் சங்க செயலாளராகவும் உள்ளேன்.
இந்த வருடத்தில் தமிழக குரல் நடத்திய விழாவில் தன்னம்பிக்கை நாயகி விருது பெற்றுள்ளேன். Indian Iconic award மற்றும் VISTA award வாங்கி உள்ளேன்.க தைகள் சொல்ல பிடிக்கும்.பெண்கள் விழிப்புணர்வு குறித்தும் பேசியுள்ளேன். இந்த வருடம் B.Ed படிப்பில் சேர்ந்துள்ளேன். இந்த வருட இறுதியில் தர்மபுரியில் நடக்க உள்ள நிகழ்ச்சியில் ICONS OF EXCELLENCE award வாங்க தேர்வாகியுள்ளேன். இது போக நூலகத்தில் புரவலராக உள்ளேன். கையெழுத்து போட்டிகளிலும் விருதுகள் பெற்றுள்ளேன்.
இந்த தருணத்தில் எனக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்த என் கணவருக்கும், என் குடும்பத்துக்கும் என் மனபூர்வமான நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
சரி ஜெய்சக்தி.. உங்களைப் போலவே வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று விரும்பும் பெண்களுக்கு நீங்க சொல்லும் ஒரு அட்வைஸ் என்னவாக இருக்கும்?
பெண் என்பவள் முதலில் தன் குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பெண்கள் எந்த பிரச்சனை வந்தாலும் அதனை எதிர்கொள்ள தன்னம்பிக்கை அவசியம். வீழ்வேன் என்று நினைத்தாயோ என்ற வாசகத்தை மனதில் வரித்துக் கொள்ள வேண்டும். கண்களில் தைரியம் வேண்டும்.
பெண் சுதந்திரமாக இருக்க தன் காலில் நிற்க வேண்டும். Self independency முக்கியம். துணிவு அவசியம். சவால்களை எதிர்கொள்ளும் திறமை வேண்டும். எதற்காகவும் யாருக்காகவும் முடங்க கூடாது.. சொல்லி முடித்து ஜெய்சக்தி காட்டிய புன்னகையில் ஆயிரம் மெசேஜ்கள் புதைந்து கிடக்கின்றன.
ஜெய்சக்தி கற்றுத் தரும் இன்னொரு வித்தை என்ன தெரியுமா.. No சொல்லுங்க என்பதுதான்.. அது என்ன நோ என்று கேட்கலாம்.. அதுகுறித்து ஜெய்சக்தியிடமே கேட்டோம்.. அதற்கு அவர் எஸ் சொல்வது சுலபம்.. நோ சொல்வதுதான் திறமை. எங்கே எல்லாம் நோ சொல்லலாம்.. எப்படி நோ சொல்லலாம்.. ஏன் நோ சொல்ல வேண்டும்.. இதனால் என்ன பயன்.. நோ சொல்வது ஒரு திறன்.. அது ஒரு கலை.. அது தன்னம்பிக்கை.. அது சிறந்த பதிலும் கூட. நோ சொல்பவர் கெட்டவர் இல்லை. நோ சொல்லக் கற்றுக் கொள்வது அவசியம் என்று அதுகுறித்து விரிவாகவே விளக்குகிறார்.
ஜெய்சக்தியின் தன்னம்பிக்கை பேச்சுக்கள் நிச்சயம் பெண்களுக்கு தேவையான ஒன்றுதான். உண்மையில், ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஜெய்சக்தி நிச்சயம் இருப்பார்.. அதை அவர்கள் உணரும்போது அவர்களும் சாதிப்பார்கள்!