விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

Meenakshi
Nov 06, 2025,04:36 PM IST

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.


விஜய்யின் சினிமா கெரியரில் கடைசி படமாக ஜனநாயகன் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு பின்னர் நடிகர் விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். அதற்கான பணிகளையும் அவர் செய்து வருகிறார். எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த திரைப்படம் தான் ஜனநாயகன். இப்படத்தின் எடிட்டிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்தாண்டு ஜன., 9ம் தேதி திரைக்கு வரவுள்ளது. அனிருத் இசையமைக்கு இந்த படத்தை கே.வி.என்.நிறுவனம் தயாரித்துள்ளது. 


இப்படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா பைஜு மற்றும் CWC மோனிஷா ப்ளெஸி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படம் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.




இப்படம் ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என படக்குழு முன்னரே தெரிவித்திருந்தது. விஜய்யின் கரூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக படத்தின் தேதி தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.  இந்த நிலையில்,  படத்தின் வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தும் விதமாக படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி மக்கள் மத்தியில் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.