மழை!
- புரட்சிப் பாவை தே.ஜெனிட்டா ரீனா
மண்ணில் விழுந்த மழைத்துளி!
விண்ணில் பிறந்த மழைத்துளி!
மண்ணில் வாழும் உயிர்க்கு எல்லாம் உயிர்த்துளி!
தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும்
பறவைகளுக்கும் மனிதர்களுக்கும்
விவசாயிகளுக்கும் வணிகம் செய்பவருக்கும்
வாழ்வைத் தருவது மழை!
சிறு சிறு பூச்சிகள் புழுக்கள், ஊர்வன போன்ற பல்லுயிருக்கும்
பலமாய் இருப்பது மழை!
மனிதனின் தேவையை பூர்த்தி செய்கிறது மழை!
பூமியின் வெப்பநிலையை சமன் செய்கிறது மழை!
வாடிய பயிரை செழிக்கச் செய்கிறது!
தண்ணீருக்காக பல கிலோமீட்டர் தேடிச் செல்கின்ற
கால்நடைகளுக்கு இளைப்பாற உதவுகிறது!
மழையினால் விவசாயம் செழிப்பாக வளர்கிறது!
அதன் மூலம் அன்றாட தேவைகளான காய்கறிகள், பழங்கள்,
கீரைகள் அனைத்தும் மக்களினம் பெற்று பயன்பெற உதவுகிறது!
மழை சூரியனுக்கு ஓய்வு கொடுக்கிறது !
மழை இயற்கையை பாதுகாக்கிறது!
இயற்கை கொடுக்கின்ற கொடையான மழையை
நாம் வீணாக்காமல் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளிலும், குளங்களிலும்
ஏரிகளிலும், ஆறுகளிலும், அணைகளிலும்
நீர் தேக்கங்களிலும் தேக்கி நம் வாழ்விற்கு வளம் சேர்ப்போம்!
மழை நீரை உயர்நீரெனக் காப்போம்!
(தே. ஜெனிட்டா ரீனா MA.BEd.DTEd, ஆசிரியர், வயலாநல்லூர், பூந்தமல்லி, திருவள்ளூர். 17 வருட காலமாக ஆசிரியராக இருக்கிறார். பட்டிமன்றப் பேச்சாளராகவும் வலம் வருகிறார்)