ஆசிரியர் ஓர் அகல்விளக்கு
Sep 05, 2026,04:58 PM IST
- புரட்சிப் பாவை தே. ஜெனிட்டா ரீனா
ஆசிரியர் ஓர் அகல்விளக்கு
அன்பு காட்டுவதில் அன்னையாக திகழ்ந்து!
ஆர்வம் ஊட்டுவதில் ஆலோசகராக இருந்து!
இசைப்பதில் செய்யுளை இசைஞானியாக வடிவமைத்து!
ஈகையை என்றும் ஈந்து உதவு!
உலகம் போற்ற உயர்ந்து வாழு!
ஊக்கம் கொடுத்து ஊரினைத் திருத்து!
எண்ணம் போல் எளிமை கொண்டு!
ஏற்றம் பெற ஏற்பாடுகள் செய்து!
ஐயம் தீர ஐம்பொறி அடக்கி!
ஒற்றுமை என்றும் ஒன்றி உயர்த்து!
ஓயாமல் உழைத்து ஓடி நிறுத்தி!
ஔவை காட்டிய ஔடதத்தை குறை!
கற்க வேண்டியதை கற்றுத் தேர்ந்து
சகலமும் தெரிந்து சரித்திரம் படைத்து
நன்றியை ஆசிரியருக்கு நற்செயல் நிகழ்த்தி
தலைமை பொறுப்பை தகுதியுடன் ஏற்று
பட்டங்கள் பெற்று பாரினில் உயர்ந்து
மண்ணுலகில் நற்செயல்களால்
மானுடம் செழிக்க தகுதியுள்ள ஆசிரியராக
தலைமுறையை உருவாக்கி!
(தே. ஜெனிட்டா ரீனா MA.BEd.DTEd, ஆசிரியர், வயலாநல்லூர், பூந்தமல்லி, திருவள்ளூர். 17 வருட காலமாக ஆசிரியராக இருக்கிறார். பட்டிமன்றப் பேச்சாளராகவும் வலம் வருகிறார்)