இந்திய பேட்டிங் வேகத்தை சீர்குலைத்த ஜிம்மி நீஷம்.. சுத்த மோசம்.. ஒரே ஓவரில் 3 விக்கெட்கள்!
அகமதாபாத்: 300 ரன்களை இந்தியா ஈஸியாக தொடும் என்று நினைக்கும் அளவுக்கு புயல் வேகத்தில் போய்க் கொண்டிருந்த இந்திய பேட்டிங்கை, ஜிம்மி நீஷமின் அதிரடியான பந்து வீச்சு சீர்குலைத்து விட்டது.
200 ரன்களைத் தாண்டிய நிலையில் இந்தியா தட்டுத் தடுமாறி ரன் குவித்து வருகிறது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், ஜிம்மி நீஷம் இந்திய அணியின் முக்கியமான 3 விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்தி அதிர்ச்சியளித்தார்.
16 ஓவர்கள் வரை இந்தியா புயல் வேகத்தில் போய்க் கொண்டிருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமான அந்த 16வது ஓவரில் ஜிம்மி நீஷம் பெரும் அதிர்ச்சியை இறக்கி விட்டார். முதலில் அதி வேகமாக போய்க் கொண்டிருந்த சஞ்சு சாம்சன் 89 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட் ஆனார். அடுத்து, இஷான் கிஷன் 54 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதை விட பெரிய அதிர்ச்சி என்னவென்றால், கேப்டன், சூர்யகுமார் யாதவ் வந்த வேகத்தில் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார்.
இந்திய அணியின் வேகம் அதி வேகமாக இருந்ததால் அது ஈஸியாக 300 ரன்களைத் தொடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்த 16வது ஓவருக்குப் பிறகு நிலைமை மொத்தமாக மாறிப் போனது. இந்தியாவின் பேட்டிங் இப்போது டிபன்ஸ் மோடுக்குப் போய் விட்டது.
15 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்து மிகவும் வலுவான நிலையில் இருந்த இந்திய அணி தற்போது 5 விக்கெட் இழப்புக்கு 226 என்ற துயர நிலைக்குப் போய் விட்டது. தற்போது ஹர்டிக் பாண்ட்யாவுக்கும் அவுட்டாகி விட்டார்.