sankarankovil special: சங்கரன்கோவில் என்றாலே உடனே என்ன நினைவுக்கு வரும் தெரியுமா?

Su.tha Arivalagan
Nov 26, 2026,03:38 PM IST

- ஜோ. கோவில்பட்டி 


ஒவ்வொரு ஊரிலும் ஒரு ஸ்பெஷல் இருக்கும். சங்கரன்கோவில் என்றால் சுல்தான் கடை பிரியாணிதான் நினைவுக்கு வரும். 


அந்தப் பக்கம் சென்றாலே வாசம் மூக்கைத் துளைக்கும். மூன்றாவது தலைமுறையாக வெற்றிநடை போடுகிறது. 


ஆலமரத்தடியில் வண்டியை நிறுத்திவிட்டு, கடை உள்ளே நுழைந்து 'ட' வடிவ பெஞ்சில் இடம் கிடைத்தது. அந்தக் கடையின் ஸ்பெஷல், நாம் சாப்பிட்டு முடிப்பதற்குள் அடுத்த ஆள் சீட் பிடிக்க நம் பின்னால் நிற்பார்கள். 




சுவைத்து மெதுவாகச் சாப்பிட முடியாது. சீரகசம்ப பிரியாணி சுடச்சுட வேற லெவலில் இருக்கும். 


மாலை சூப்பு + பன் கிடைக்கும். "இந்தப் பழக்கம் எப்படி வந்தது" என்று ஒரு நாள் ஓனர்கிட்ட மற்றும் கடையில் வந்த பெரியவர்கள்கிட்ட கேட்டேன். 


பலவிதக் கதைகள் சொன்னார்கள். "இதையெல்லாம் ஏன் உங்ககிட்ட சொல்கிறேன் தெரியுமா?" அதே சுல்தான் கடை கோவில்பட்டில இன்று திறக்கப் போறாங்க. 


எத்தனை கடை எந்த ஊரில் திறந்தாலும் "நமக்குப் பிடித்த கடை சங்கரன்கோவில் சுல்தான் தானுங்க." 


ஆமா உங்களுக்கு...!?



(கட்டுரையாளர் ஜோ.கோவில்பட்டி, ஆசிரியர். 33 வருடங்கள் ஆசிரியர் பணி. சாலமன் பாப்பையா கற்றுக் கொடுத்த மேடைப்பேச்சுக் கலை மற்றும் நகைச்சுவை பேச்சைத் தொடர்கிறார்.)