அம்மாப்பா வேலைக்குப் போகட்டும்.. புள்ளைங்க ஜாம் ஜாம்னு சாப்பிட்டு படிக்கட்டும்!
Sep 24, 2026,06:02 PM IST
- ஜோசப் சாம்ராஜ்
தென்காசி மாவட்டம் எமது பள்ளியில் காலை உணவுத் திட்டத் தொடக்க விழா.. ஊராட்சி மன்றத் தலைவர்.. விழா ஆரம்ப நிகழ்வாக பள்ளி செயலாளர் வரவேற்று பேசினார். பின்னர் எல்லா விழாவில் நடைபெறுவதை போல பொன்னாடை போர்த்தும் நிகழ்வு.
எங்கள் ஊர் அருகில் தயார்செய்த பருத்தி ஆடை துண்டு போர்த்தப்பட்டது. துவக்க விழாவில் வந்து இருந்த அனைவருக்கும் லட்டு வழங்கப்பட்டது. பின்னர் சர்க்கரைப் பொங்கல், பொங்கல் சாம்பார் வழங்கப்பட்டது. குழந்தைகள் சந்தோஷமாக சாப்பிட்டனர்.
எங்கள் பகுதியில் மாணவரது பெற்றோர் அதிகாலை செங்கல் காளவாசல் வேலைக்கு போய்விடுவார்கள். குழந்தைகள் தான் சமைத்து சாப்பிட்டு வருவதாக சொல்வாங்க. ஆனால் இப்போது அந்த நிலை மாறிவிட்டது.
ஆங்கில வழி பள்ளியில் கிடைப்பது போல இங்கும் ஜாம்ஜாம் என்று உணவு. இனி குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வார்கள்.
நான் பள்ளியில் படிக்கும் போது கோதுமை உணவு தருவார்கள். மணமாக இருக்கும். என் வீட்டில் டிபனில் கொடுத்து விடும் உணவை பசங்க கிட்ட கொடுத்து விட்டு சத்துணவு உணவை மகிழ்ச்சியாக சாப்பிடுவதுண்டு. மறக்கமுடியாத காலங்கள்.
இந்த நினைவுகளோடு மரத்தில் இருந்து பறவைகள் நமக்கும் எதாவது கிடைக்கும் என்று ஆசையோடு பார்த்துக்கொண்டு இருந்தது. வாழ்க மாண்புமிகுஜோசப் விஜய் என்று மனதில் நினைத்து கொண்டே வகுப்பறையில் நுழைந்தேன். தென்றல் காற்று ஜன்னல் வழியாக வீசியது.
(கட்டுரையாளர் த. ஜோசப் சாம்ராஜ், ஆசிரியர். குருவி குளம் சரகம், தென்காசி மாவட்டம். 33வருடங்கள் ஆசிரியர் பணி. சாலமன் பாப்பையா கற்றுக் கொடுத்த மேடைபேச்சுக் கலை மற்றும் நகைச்சுவை பேச்சைத் தொடர்கிறார்)