Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!

Su.tha Arivalagan
Oct 14, 2026,04:55 PM IST
- ஜோசப் சாம்ராஜ்

கேரளா டூர் சென்றபோது பொதுவாக அங்கு கார் ஹாரன் சப்தம் அதிகமாக கேட்கப்படவில்லை. அவரவர் வழியில் பொறுப்புடன் செல்வது ஆச்சரியமாக இருந்தது. 

ஹோட்டல் உணவை ஊண் எனவும் நீரை சுடுநீர் மற்றும் அதிகம் பதிமுகம் கலந்து ரோஸ் வாட்டராக தருவது நன்றாக தான் இருந்தது. கடைகளில் மூன்று வகையான வாழைப்பழம் இருந்தது. பழங்களை நிறுத்து தான் தருகின்றனர். 

ஒரு கடையில் ஸ்நாக்ஸ் மற்றும் தேனீர் சாப்பிடும் முன்பு பணம் கொடுத்தேன். வாங்க மறுத்து விட்டு முதலில் திருப்தியாக சாப்பிடுங்கள் என்று கூறி பின்னர் வாங்கி கொள்ளலாம் என்று சொல்லி விட்டார்கள். பொதுவாக மக்கள் சரளமாக பேசும் பண்பு உடையவர்கள். 

கடைத்தெருவில் காணும் இடமெல்லாம் உப்பு நீரில் ஊறவைத்து நெல்லி அன்னாசி பழம் எலுமிச்சை பிழிந்து குலுக்கி சர்பத். உணவு உண்டு முடிந்த பிறகு பிஸ்தா பாதாம் போட்ட சிறுடப்பா போன்ற ஆரோக்கியமான உணவு ஐட்டம் பார்க்க பார்க்க வியப்பாக இருந்தது. 



முக்கியமாக மகளிர் கூந்தல் விரிந்த நிலையில் இருப்பது கேர்ள பைங்கிளிகள் ஸ்டைல் போல. ஆங்காங்கே குப்பை தொட்டியில் குப்பைகள் போட பழகியிருந்தார்கள். ஓரளவு சுத்தம் கடைபிடிக்கப்பட்டது. அருவியில் குளிக்க போனால் கூட இலவசம் கிடையாது. 

இலவசங்கள் எப்போது ஒழிக்கப்படுகிறதோ அப்போது தான் நாடு முன்னேறும் என்பது என் கருத்து. நானும் எம்பள்ளி மாணவர்களுக்கு நூறு சதவீதம் இலவசமாக வாங்கி தருவதில்லை. உன் பங்கு எவ்வளவு அல்லது உன்னால் எவ்வளவு முடியுமோ அதை போட்டு நானும் கொஞ்சம் சேர்த்து தான் கல்வி உபகரணங்கள் மற்றும் புத்தகங்கள் வாங்கி வருவதுண்டு. 

லைஃப் ல எப்போதும் உண்மை மற்றும் நேரந்தவறாமை முக்கியம். அருகில் இருக்கும் மாநிலம். நல்ல செயல் இருந்தால் பாராட்டி மகிழ்வது தமிழன் கடமை தானே.

(கட்டுரையாளர் த. ஜோசப் சாம்ராஜ், ஆசிரியர். குருவி குளம் சரகம், தென்காசி மாவட்டம். 33வருடங்கள் ஆசிரியர் பணி. சாலமன் பாப்பையா கற்றுக் கொடுத்த மேடைபேச்சுக் கலை மற்றும் நகைச்சுவை பேச்சைத் தொடர்கிறார்)