காடும் ..கடலும்...!

Su.tha Arivalagan
Feb 09, 2026,10:15 AM IST

- க.யாஸ்மின் சிராஜூதீன்


காடும் கடலும் நமக்குதான் 

இயற்கை அன்னையின் கொடையும்தான்....

காடு நிறைந்தால் பசுமைதான் 

கிடைக்கும்  தூய காற்றுதான்....

கடலும் இருக்கு நிரம்பிதான் 

கிடைக்கும்  மெத்த வளங்கள்தான்...

இரண்டும் உயிரின வாழிடம்தான் ....

காட்டை அழித்தால் ஊர்கள்தான் 

கடல் பொங்கினால் ஊரில்தான் 

இதனால்  விளையும் ஊறுதான் 

உயிர்கள் எங்கு வாழும்தான் .....

அதனதன் இடத்தில் இருந்தாலே 

சீறும் சிறப்புமாய் வாழலாம் ....




இயற்கையை சீண்டாமல் 

மாற்றம் எதுவும் செய்யாமல் 

சிந்தனையை  சீண்டி செயலாக்கு 

சேதம் எல்லாம்  வளமாகும்....

காடும் கடலும் முக்கியம் 

மனித  வளத்தை காக்கும் பொக்கிஷம்....

காட்டு வளமும் கடல் வளமும் 

காக்க வேண்டும்  கடமைதான் 

அள்ளி கொடுக்கும் கொடையும்தான்...!


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)