இனிமை சேர்ந்திடவே இதயமும் மகிழ்ந்திடவே.. காணும் பொங்கல்!
Jan 17, 2026,01:48 PM IST
- சிவ.ஆ. மலர்விழி ராஜா
காவிரி சங்கமிக்கும் கடலிடத்தில்...
இதயங்கள் சங்கமிக்கும் உறவுகளிடத்தில்......
இல்லங்கள் எல்லாம் இனிமை பெறும்...
இசையில் இன்னிசை தாளமிடும்......
வண்டுகள் கூடி தேனைத் தரும்...
உறவுகள் கூடி வசந்தம் பெறும்....
காணும் பொங்கல் காட்சியிலே...
கடவுளும் ஆனந்த நடனமிடும்.....
மங்கையர் எல்லாம் மான் போலே.....
மல்லிகை மலராய் மலர்ந்து வரும்......
மாவிலை தோரணம் மாலைகளும்
தென்னங்கீற்றின் ஓலைகளும்....
தெருவினில் திருவிழா கோலம் தரும்....
தென்றலாய் இதயத்தை வருடி விடும் .....
அண்ணன் தம்பி தங்கைகளும்....
அத்தை மாமா மைத்துனரும்......
சொந்தங்கள் கூடி சுகமும் தரும்.....
சொர்க்கமும் இது என எண்ணம் வரும்.......
எலுமிச்சை கனியில் விளையாடல்....
எதிர் வரும் அணியில் கபடியென......
இளைஞர்கள் வீரம் தீரமென.....
உரியடிக்கும் ஒரு கூட்டம்.....
கோலம் கும்மி கோலாட்டம்.......
மியூசிக் சேரில் விளையாடல்......
சாக்கு பிடித்து ஓடி வரும்.....
குழந்தைகள் ஆனந்தக் களிப்பாட்டம்......
முடிவினில் பரிசுகள் மனதை தொடும்....
கட்டுசாதம் கட்டிவந்து
கலகலவெனவே.......மகிழ்ந்திருந்து.....
அன்பென உறவுகள் பலர் கூடி.....
ஆற்றங்கரையினில் பரிமாற்றம்......
இத்தனை இன்பங்கள் கோடி...வரும்......
இந்திய மண்ணில் இன்பம் தரும்......
ஒற்றுமையுடனே வாழ்ந்திருப்போம்......
உள்ளத்தில் மகிழ்ச்சி பெருகிடவே.......
இனிமை சேர்ந்திடவே இதயமும் மகிழ்ந்திடவே.....
கனியென அமுதுமென
களிப்புடன் வாழ்ந்திடுவோம்.....!