துரோகம்!
Aug 12, 2026,01:12 PM IST
- கவி கலை
துரத்திக் குத்தினாலும்
துயரென எண்ணாமல்
துரிதமாய் உதவிடு.
தவறின்றித் துப்பினாலும்
தயங்காமல் துடைத்து
தவமாய் முகம் கொடு .
பகைவன் பகைத்தாலும்
பாரமாய் இருந்தாலும்
பக்குவமாய் பயணப்படு.
நேருக்கு நேர் இகழும்
நேர்மையான மனிதரை
நேர்த்தியாக ஏற்றிடு .
தொடராமல் காத்திடு.
(சொ.கலையரசி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். தாய் CBSE பள்ளி வேதியியல் ஆசிரியையாக 3 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக "எழுதுக" என்னும் புத்தகம் எழுதும் இயக்கத்தோடு இணைந்து எழுத்துப்பணியாற்றி வருகிறார். 1. புழுதிமண் கவிதைத்தொகுப்பு, 2. உடைந்தும் உருவெடு குறுநாவல் என இரு நூல்களைப் படைத்துள்ளார். இறையன்பு IAS முன்னிலையில் அவை வெளியிடப்பட்டன.)