Kalaiyarasi Muthuvel Poems: உள்ளம்.. முகமூடியும் மாறுபட்ட வேஷங்களும்!

Su.tha Arivalagan
May 12, 2026,04:10 PM IST

- கலை கவி


கவிஞர் - ஆசிரியர் சொ. கலையரசி எழுதிய இரு அழகிய கவிதைகள் உங்கள் வாசிப்புச் சுவைக்கு...


மனம் மலர மறுத்து  

முகம் மலரும் தருணம்  

அகம் முழுதும் வெறுத்து 

இகம் மகிழும் தருணம்  

போலியாக நடித்து  

பெருமை சேர்க்கும் தருணம்  

பொய்யாகப் பேசி அதை  

மெய்யாக்கும் தருணம் 

உண்மை முகம் மூடிக் கொள்வதை விட 

உண்மை முகமே முகமூடியாக இருந்துவிடலாம். 

ஒரே முகத்துடன் எந்நாளும்.



\

மாறுபட்ட வேஷங்கள் 

 

நாடக மேடையில் கதாப்பாத்திரங்கள்  

நிஜமாகிட போடும் வேஷம் ! 

 

வாழ்கை மேடையில் நிஜத்தினை மறைக்க  

நிழலாகப் போடும் வேஷம் ! 

 

வேஷங்கள் மாறுபடலாம் 

வேதனைகள் மாறாது. 

 

நிலைமை மறைக்கப்படலாம். 

நிதர்சனம் மறையாது.


(சொ.கலையரசி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். தாய் CBSE பள்ளி வேதியியல் ஆசிரியையாக 3 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக "எழுதுக" என்னும் புத்தகம் எழுதும் இயக்கத்தோடு இணைந்து எழுத்துப்பணியாற்றி வருகிறார். 1. புழுதிமண் கவிதைத்தொகுப்பு, 2. உடைந்தும் உருவெடு குறுநாவல் என இரு நூல்களைப் படைத்துள்ளார். இறையன்பு IAS முன்னிலையில் அவை வெளியிடப்பட்டன.)