கவி கலையின் இரு கவிதைகள்!
- கவி.கலை
உள்ளம் தொடும் எழுத்துகள்!
கனவுலகில் வாழ்வதை விட
கவிதையுலகில் வாழ்ந்து விடலாம் !
கனவுலகில் தொடுதல் இல்லை .
கவிதையுலகில் தொடுதல் உண்டு.
அதனால்தான் எழுத்துகள்
உள்ளம் தொடுகின்றனவோ?
--
காகிதம்
தினம் கருத்துக்கள் எழுதி
கருத்தாய் காத்திடுவேன்,
தினம் எண்ணுவோர் பையில்
பணமாய் மாறிடுவேன்,
நிதம் பாலர்கள் கையில்
பட்டமாய் பறந்திடுவேன்
அணுதினம் ஆசை சொத்தினை
ஆவணம் ஆக்கிடுவேன்,
பாலான குப்பையாய்ப்
பள்ளத்தில் வீசப்படும்
காகிதம் ஆகிடுவேன்..!
(சொ.கலையரசி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். தாய் CBSE பள்ளி வேதியியல் ஆசிரியையாக 3 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக "எழுதுக" என்னும் புத்தகம் எழுதும் இயக்கத்தோடு இணைந்து எழுத்துப்பணியாற்றி வருகிறார். 1. புழுதிமண் கவிதைத்தொகுப்பு, 2. உடைந்தும் உருவெடு குறுநாவல் என இரு நூல்களைப் படைத்துள்ளார். இறையன்பு IAS முன்னிலையில் அவை வெளியிடப்பட்டன.)