கிருத்திகை நாயகனே கீர்த்திகளை தருபவனே..!

Su.tha Arivalagan
Aug 06, 2026,11:02 AM IST

- கலைவாணி ராமு 


கிருத்திகை நாயகனே 

கீர்த்திகளை தருபவனே.. 

சங்கடங்களை தீர்ப்பவனே... 

தர்மத்தின் தலைவனே... 

சிவனின் புத்திரனே...

சிங்காரவேலனே....


சிந்தை தெளிய வைத்தவனே.. 

தீந் தமிழுக்கு அதிபதியே... 

மாங்கனிக்காக மலை மீது அமர்ந்தவனே....


தெய்வ யானையின் மணாளனே... 

வள்ளியின் காதலனே.... 

வளங்கள் பல தருபவனே.... 

அசுரரை அழித்தவனே.. 

அழகிய முகம் கொண்டவனே ...




முருகு என்றால் அழகு என்று பெயர் கொண்டவனே.... 

தந்தைக்கு மந்திரம் உபதேசித்தவனே....

உமையாளின் அன்பு புதல்வனே... 

ஆனைமுகனின் அன்பு தம்பியே.... 

தேவர்குலம் காத்தவனே... 


அருணகிரிநாதருக்கு அருளியவனே...

வீரபாகுவின் நண்பனே... 

வினைகளை தீர்ப்பவனே.... 

வீரம் நிறைந்தவனே... 

வெற்றிகள் பல தருபவனே... 


உன்னைத் தொழுதே வணங்கி சிறப்பிக்கின்றேன்