மீண்டும் பிறந்து வா மகாத்மாவே!
- கலைவாணி ராமு
போர்பந்தரில் பிறந்தவரே...
போதனைகள் பல தந்தவரே...
எளிய உருவம் கொண்டவரே....
ஏற்றமிகு வாழ்விற்கு வித்திட்டவரே....
அக்டோபரில் உன் பிறந்த நாளாம்...
அகிலம் போற்றும் திருநாளாம்...
அகிம்சை வழியில் பின்பற்றி...
அறவழியில் போர் செய்தவரே....
தண்டி யாத்திரை நாயகனே...
தடியை ஊன்றி நடந்த. தாத்தாவே...
பாழாய் போன இப் பாரினில்...
பரிதவித்திடும் எங்களைக் காப்பாற்ற
மீண்டும் பிறந்து வா மகாத்மாவே....
அன்று நீவீர் போராடி பெற்றெடுத்த சுதந்திரத்தை...
பேணி காத்திட யாரும் இங்கில்லை
மீண்டும் பிறந்து வா மகாத்மாவே...
பாரதத்தை பண்படச் செய்ய
மீண்டும் பிறந்து வா மகாத்மாவே....
கஸ்தூரிபாய் அம்மைக்கு கருணை காட்டிய காந்தியே....
எங்களை துன்புறுத்தும் கயவர்களுக்கு பாடம் புகட்ட
மீண்டும் பிறந்து வா மகாத்மாவே....
அன்று நீ ஒழித்த மதுவிலக்கை...
மறந்து போதையில் திளைக்கும் மது பிரியர்களை
சிந்தை தெளிய வைக்க மீண்டும் பிறந்து வா மகாத்மாவே...
அந்நியர்களிடமிருந்து எங்களை காப்பாற்றிய அண்ணலே....
தற்கால அரசியல்வாதிகளிடம் இருந்து எங்களைக் காப்பாற்ற
மீண்டும் பிறந்து வா மகாத்மாவே.....