தாய் மொழியாகிய தமிழ் மொழியே நம் தமிழரின் தனி அடையாளமே!
- கலைவாணி ராமு
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற வீர வரிக்கு விவேகம் சேர்த்தது நம் தமிழ் தான்
கவிதைக்கு அழகே நம் தமிழ் மொழி தான். தமிழ் மொழியில் உள்ள உயிர் எழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துக்கள் அனைத்தும் நமக்கு கிடைத்த சொத்துக்கள்
இதிகாச கதைகளும் புராண கதைகளையும் தமிழ் மொழியில் கேட்டாலே இன்பம் . தமிழில் உள்ள இயல் இசை நாடகம் நம் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கண்ணாடி போன்றது.
உயிர் மெய் எழுத்தில் உள்ள வல்லினம் மெல்லினம் இடையினம் நம் மொழியின் மகிமையை உணர்த்துகிறது
கவிஞர்கள் கவிபுனையும் பொழுது நம் மொழி மேலும் மேலும் மெருகேருகிறது. சொற்பொழிவுகளில் சொர்க்கத்திற்கு
ஈடாக நம் மொழி விளங்குகிறது. கன்னித் தமிழ், காவியத்தமிழ், செம்மொழி தமிழ், வீரத்தமிழ், நற்றமிழ் என
தமிழ் பல்வேறு பரிமாணங்களில் அறியப்படுகிறது.
மன்னர்கள் முதல் மாவேந்தர்கள் வரை தமிழ் மொழிக்கு சங்கம் வைத்து அழகு செய்தனர். அண்டை நாட்டாரும்
நம் தாய் மொழி கற்க ஆசை கொண்டனர். திருக்குறள் நம் தமிழ் மொழியில் இயற்றப்பட்டது நம் தமிழ் மொழிக்கு
மிகப்பெரிய பெருமையாகும்.
வாழ்க தமிழ் வளர்க தமிழ்