அன்பின் மறு உருவம் என் அன்னை!

Su.tha Arivalagan
May 10, 2026,04:26 PM IST

- கலைவாணி ராமு 


ஆனந்தத்தை அள்ளித் தருவாள் அனைவருக்கும்

இன் முகமே அவளின் இயல்பு குணம் 

ஈகை குணமே அவளின் சொத்து

உற்றார் உறவினர்களை அரவணைப்பதில் உன்னத பண்பு கொண்டவள் அவள்

ஊர்  போற்றும் படி வாழ்ந்து உள்ளம் கொள்ளை கொண்டவள்

எண்ணிய எண்ணத்தில் திண்ணம் கொண்டவள்

ஏற்ற மிகு எங்களின் வாழ்விற்கு ஏணிப்படியாய் வாழ்ந்தவள்.




ஐவரைப் பெற்ற குந்தி அவள்

ஒற்றுமையுடன் வாழ வழி வகுத்துக் கொடுத்தவள்

ஓவியமாய் எங்கள் வாழ்வில் என்றும் ஒளிர்பவள்

ஓளவை சொன்ன ஆத்திச்சூடி வழி வாழ்ந்து எங்களுக்கு வாழ கற்றுக் கொடுத்த 


என் அன்னையை போற்றி 

அவளின் திருவடிக்கு என் கவிதையை சமர்ப்பிக்கிறேன்


இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்