தித்திக்கும் சித்திரைத் திருநாளில் திகட்டாத கவி வாழ்த்து!
Apr 14, 2026,02:56 PM IST
- கலைவாணி ராமு
சின்ன சின்ன சொல்லெடுத்து
சிங்காரமாய் கவி தொடுத்து
தித்திக்கும் சித்திரை திருமகளே வருக வருக
நித்தமும் நிம்மதி தருக தருக
பங்குனிக்கு விடை கொடுத்து
பொங்கும் புது வெள்ளமாய்
சித்திரையை வரவேற்போம்
மலரை கண்டால் வண்டுகளுக்கு கொண்டாட்டம்
சித்திரை வந்தால் பிள்ளை வாண்டுகளுக்கு கொண்டாட்டம்
விடுமுறை வருவதால்!
பகலவனின் பட்டொளி வீசினாலும்
பெற்றவர்கள் ஏசினாலும்
துள்ளித் திரிவோம் வீதிகளில் சித்திரையில்
மாதத்தில் சிறந்தது சித்திரையே
ஆனந்தமாய் உண்டு களித்து
உறங்கி விழித்திடுவோம் நித்திரையை
மீனாட்சி சொக்கனின் திருமண கோலம் காண
சித்திரையே வருக
கனல். போன்ற வெய்யிலில்
குளிர் நிலவாய் ஆற்றில் இறங்கும் கள்ளழகரே வருக சித்திரையில்
சித்திரையில் புத்தாண்டு
பொலிவுடன் தொடங்கட்டும் மாற்றங்கள் மலரட்டும்
மேளதாளங்கள் முழங்கட்டும்
எல்லார் வாழ்விலும் மகிழ்ச்சி மலரட்டும்
அனைவருக்கும் சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்