டிஜிட்டல் யுகத்துப் பறவைகள்.. கலையின் ஹைக்கூ கவிதைகள்!

Su.tha Arivalagan
Sep 14, 2026,10:33 AM IST

- தமிழ்மாமணி எழுத்தாளர் இரா. கலைச்செல்வி 

       

சம்பள நாள் அன்றே

வந்து விடுகிறது மாதக்கடைசி!

இன்றைய நுகர்வுக் கலாச்சாரம்.


--


அலமாரி முழுக்க உடைகள் 

வசதியாய் உடுத்துவதற்கு எதுவும் இல்லை.

நவீன வீண் பெருமை. 



இன்றைய ஆடம்பரத்தில்

கரைகிறது...

நாளைய நிம்மதி!

சேமிப்பற்ற எதிர்காலம்.


--


ஆயிரம் முகநூல் நண்பர்கள்...

ஆறுதல் சொல்ல...

அருகில் யாருமில்லை!


--


சுதந்திரத்தின் விலங்கு.

ஆசை காட்டி இழுக்கும்

கிரெடிட் கார்டு.!

கடன் வலை .


--


கூகுளில் தேடுகிறான்.

தொலைந்து போன

தன் சுயத்தை!

தேடல்.


--


அநீதி கண்டால்

ஒன்றாகக் கூடும்.

டிஜிட்டல் புரட்சியாளர்கள்!

சமூக விழிப்புணர்வு.


(சிவகங்கையைச் சேர்ந்த  எழுத்தாளர் இரா.  கலைச்செல்வி, தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர் அரசு அதிகாரி ஆவார் . அவரின் கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும் , வாசிப்பின் மீதும், தீராக்  காதல் கொண்ட அவர்,  நீண்ட  காலமாக  எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன. கதைகளைத் தவிர,  கவிதைகளும், ஆய்வு கட்டுரைகளையும் அதிகம் எழுதி வரும் இவர் உளவியலில் முதுகலை பட்டமும் பெற்றவர். சாதனைச் செல்வி, சாதனைப் பெண், தமிழ் மாமணி, தங்கத்தாரகை,  சேவா ரத்னா , கவிஞாயிறு,  கவியருவி, கவிச்செம்மல்,  உழைப்பாளர் திலகம், மகாகவி, செம்மொழி கலைஞர் விருது, கலைரத்னா ‌ போன்ற 30 ‌க்கும் மேற்பட்ட  விருதுகளையும் அவர்  பெற்றுள்ளார்)