கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியா நீங்க.. அப்படீன்னா உங்களுக்கு ஒரு குட் நியூஸ்!

Su.tha Arivalagan
Nov 28, 2025,11:29 AM IST

- சுமதி சிவக்குமார் 


கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு அரசு சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு இன்று நேர்காணல் நடைபெறவுள்ளது.


தமிழ்நாடு அரசு சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்காக பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. பல சலுகைகளும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டமும் அமலில் உள்ளது. 




இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் மதியம்1.00 மணி வரை ஸ்மார்ட் ஃபோன் வழங்குவதற்கான நேர்காணல் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நடைபெறுகிறது.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளும் இதில் கலந்து கொள்ளலாம். இதற்கு வேண்டிய ஆவணங்கள் மாற்றுத் திறனாளிகளின்  யூ. டி. ஐ. டி. ஸ்மார்ட் கார்டு. அது இல்லாதவர்கள் மாற்றுத் திறனாளி அடையாள அட்டை, மருத்துவ சான்றிதழ், புகைப்படம் இரண்டு, இவையெல்லாம்  தயாராக கொண்டு சென்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


(சுமதி சிவக்குமார், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)