உயர்வுகள் காணத் துடிக்கும் வெண்ணிலாக்கள்!
Nov 14, 2026,03:19 PM IST
-கு. கவிதா
குழந்தைச் செல்வங்கள்,
கனிவுடன் பணிவும் கலந்த இனிமைகள்,
பெருமைகள் பல கொண்ட புதுமைகள்,
திறமைகள் தன்னுள் பொதிந்த மகிழ்வுகள்,
உயர்வுகள் காணத் துடிக்கும் வெண்ணிலாக்கள்.
வெற்றிகளை குவித்து வீறுநடைபோடும் வீரர்கள்,
கற்கும் கல்வியை பயனுறச்செய்யும் பண்பாளர்கள்,
ஊக்கம் ஒன்றினையே ஊன்றுகோலாக்கும் உள்ளத்தவர்கள்,
வரலாறு படைத்து புகழ் பெறும் இளையோர்கள்.
வாழ்வில் மென்மேலும் உயர்வு பெற்று,
கல்வி கேள்விகளில் சிறப்பிடம் பெற்று,
தனக்கான இலக்கை விரைவில் அடைந்து,
வாழ்வாங்கு வாழ மனதார வாழ்த்துகிறோம்.
HAPPY CHILDREN'S DAY TO ALL THE KIDS
(கு. கவிதா, பட்டதாரி ஆசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெரிய காஞ்சிபுரம்)