கண்ணா.. கண்ணா.. உன் இதழும் இனியது.. முகமும் இனியது..!

Su.tha Arivalagan
Dec 10, 2025,04:38 PM IST

- கோ. அறிவுசெல்வி இராஜாராம்


ஹரியை மனதிலே ஊன்றிய மதுரகவியே 

கதியருளினருளாலே கற்றது ஹரிநாமமே 

அமுதநேரமளித்தது ஹரிநாமமே 

அழகான காலைப்பொழுதில் கூடியிருந்து அருந்துகிறோம் 

ஹரிநாமமே ஹரிநினைவையளித்த 

ஆசாரியர்க்கு தலையில்லால் கைமாறறியேன்


மலர்ந்தபோது பறித்தவர்களே 

வாடியபோதும் தூக்கி எறிவது மனித இயல்பு 

நீர்பாய்ச்சியவன் 

மண்ணில் மலர்செடியை ஊன்றியவன் 

இதழ்களை ரசித்தவனே

மண்ணோடு

மண்ணாக

அழியும் அழகையும்

ரசித்ததுண்டு  குறுகியகால மலரின் விதியதுவே!




இனிய காலையிசையில் கற்கண்டு சுவைத்தேன் 

இக்கதியருள் அமுதனுடன் கண்ணனனுடன் களித்தேன் 

இத்திருக்குறளில் குருவுடன் குதுகளித்தேன் 

இந்நாம ராமதிலே நற்கதியடைந்தேன் 

இவ்விவாதத்தில் வியந்துபோந்தேன் 

இம்மூளை வேளையில் முழ்கி முத்தாடலானேன்

இசையமுதத்தில் இதயம் இதமடைந்ததே

இன்றென்றும் இச்சுவை சுவிகரிப்போர் 

இப்பெருந்தவமுடையோரே


தயிர்பானை உருட்டி மறைந்து நின்ற மறையே 

தாமோதரா தாயின் சோர்விலே கட்டுண்டவனே 

ஆயர்களை அதிரச்செய்த ஆராவமுதனே 

மத்தால் மொத்துண்டாய் ஏனோ அமரர்கள் அதிபதியே


உலகளந்த உத்தமனே 

உயிர் படைத்த சத்துவனே 

மாசில்லா தத்துவனே மாயனென் வித்தகனே 

வைகுந்த நாயகனே வையகத்து தூயவனே 

திருமாலே எங்கள் பெருமாலே

அடியார்களின் அடைக்கலமே 

திருவரங்கத்து செல்வமே பல்லாண்டு பல்லாண்டு


கண்ணா.. கண்ணா..

உன் இதழும் இனியது..

முகமும் இனியது.. கண்கள் 

இனியது.. சிரிப்பும் இனியது..

இதயம் இனியது.. நடையும் 

இனியது.. மதுரா மைந்தனே

எல்லாம் இனியது..


சொல்லும் இனியது..

குணமும் இனியது.. உடைகள்

இனியது.. உடலும் இனியது..

இயக்கம் இனியது.. உலவல்

இனியது.. மதுரா மைந்தனே..

எல்லாம் இனியது


இதயம் தொடும் இராமனை

உள்ளம் தேடும்  உத்தமனை

மனம் தொடும் 

மாதவனை

கண்கள் தேடும் கண்ணனையே

அழகு இன்பம்

கிடைத்து விட்டால் 

இனிய இன்ப வாழ்வாகுமே


(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)