Poem: கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு

Su.tha Arivalagan
Jun 24, 2026,06:34 PM IST

- பன்முகக் கவிஞர் க.முருகேஸ்வரி


கவியரசன் வடித்த வரிகளில்  ..

வழிந்தோடுவது வார்த்தை அல்ல...

அவன் வாழ்க்கை ...


அவன் சிரித்தால் அது பாட்டாகும்...

அவன் காதலுற்றால்

அது கவியாகும் ...


அவன் தோல்வியும்

சரணமாகும்...


அவன் கோபதாபமோ

பல்லவியாகும்..




அவன் வேதனை ஒவ்வொன்றும்

தத்துவமாகும்...


அதனாலே அவன் பாட்டு

மனதை மயக்கும் நல்ல மெட்டாகும்...


பட்டி தொட்டி எங்கும் ஹிட்டாகும்...


பாடலுக்காகவே

சிறு கூடலில் பிறந்தானோ ...


முத்தான வரி கொடுப்பான் என்று தான் ...


முத்தையா எனும் பெயர் பெற்றானோ...


காலங்கள் வென்று அவன் பாடல்கள் நிற்பதாலே ...


அவன்

காவிய நாயகன் கண்ணதாசன் ஆனானோ...


அவன் பேனா தொட்டாலே,


வார்த்தைக்கும் உயிர் வரும்..


காகிதமோ கவிபாடும்...


திரையுலகு மட்டுமின்றி 

இலக்கியத் துறையிலும் 

அவன் படைப்பு ஏராளம்..


காவிய நாயகன் கண்ணதாசன் புகழ் என்றுமே பாராளும்!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).