கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

Meenakshi
Apr 19, 2025,12:53 PM IST

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி பாலத்தில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


கன்னியாகுமரியில் சமீபத்தில் சுற்றுலா பயணிகளுக்காக  கட்டப்பட்டது தான் இந்த  கண்ணாடி நடைபாலம்.  இப்பாலம் விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்குச் செல்வதற்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி பாலத்தில் நடந்து சென்றவாறு கீழே உள்ள கடல் அழகை   ரசிக்கும் விதத்தில் அமைந்திருப்பது தான் இதன் தனிச்சிறப்பு.




இந்தியாவிலேயே முதல்முறையாக கண்ணாடிப் பாலம் இங்கு அமைக்கப்பட்டு கடந்தாண்டு இறுதியில் திறக்கப்பட்டது. இந்த பாலத்தை கண்பதற்கு சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.


இந்தநிலையில், இந்த கண்ணாடி பாலம் பராமரிப்புப் பணிகளுக்காக கடந்த 15ம் மூடப்பட்டது. பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில் கண்ணாடி பாலம் 4 நாட்களுக்கு பின்னர் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் கண்ணாடி பாலத்தில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.