தனிமை

Su.tha Arivalagan
Oct 10, 2026,07:28 AM IST

- சிவசத்தியா, காரைக்குடி


காலம் கடந்து கொண்டேயிருக்க

வாழ்க்கை நகர்ந்து கொண்டேயிருக்க


வலிகள் மற(த்) ந்து கொண்டேயிருக்க

நினைவுகள் சுமந்துகொண்டேயிருக்க


நரையும் திரையும் நிறைந்து கொண்டேயிருக்க

தனிமையும் இனிமையின்றி சுமையாகுது


விடியலும் கொடியதாய் மலருது


கட்டில் நாற்காலி எழுதுகோலும் 

இணைபிரியா துணையாகின

நான்கு சுவற்றுக்குள் 


பசி ம(ப)றந்தது வயிறு

துணை மறந்தது தாலிக்கயிறு




எவையிங்கு  இழப்பினும்

முதுமை சொல்லும் பாடம்

உனக்குத் துணை நீயே


படைத்தவன் போட்டக் கணக்கு

தவறாது நமக்கு

இதுவே உலக வழக்கு


இருக்கும் வரை

வாழ்ந்திடு

தனிமையை

இனிமையாக்கு


கர்மா வலி (ழி) யது

வாழ்க்கைப் பாடம்

உணர்த்துவது


தளர்ந்த காலத்தில் 

உணவளிக்க 

உடன்பட்ட மக்களில்லை

இறந்த பின்

படையலிட


அருசுவைப் பலகாரம் 

ஆளுயற

வாழையிலையில்


வண்ணமாய் வரிசைகட்டும்

ஆளில்லா

மடலில் 

பங்குபோட்டு


உண்டிட

நானில்லை 

நிறைந்திட உந்தியில்லை


இறப்பென்பது

இயற்கை தானே

பிறப்பு என்பது

வாழ்க்கையானால்


எத்தனை பேருக்கு கிட்டும் பெற்றப்

பிள்ளையின்

அரவணைப்பில்


பெற்றோர் 

வாழும் 

வாழ்க்கை?