சோமாவாரத்தில் பிறந்த கார்த்திகை மாதம்.. மிக மிக விசேஷம்!

Swarnalakshmi
Nov 17, 2025,10:57 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


கார்த்திகை மாதம்.. விசுவாவசு வருடம் 20 25 நவம்பர் மாதம் 17 ஆம் நாள் திங்கட்கிழமை கார்த்திகை முதல் நாள் துவக்கம். சோமவாரம் (திங்கட்கிழமை )அன்று கார்த்திகை முதல் நாள் அமைந்தது மிகவும் விசேஷமானது. கார்த்திகை மாதம் தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாகவும், நவம்பர்& டிசம்பர் மாதங்களில் நவம்பர் 17ஆம் தேதி துவங்கி டிசம்பர் 15ஆம் தேதி முடிவடைகிறது.


கார்த்திகை மாதம் என்றாலே திருவண்ணாமலை மகா தீப திருநாள் மற்றும் ஐயப்பன் பக்தர்களுக்கு மாலை அணிந்து சபரிமலை யாத்திரை செல்பவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும்  பிடித்தமான மாதம் ஆகும். கார்த்திகை மாதம் சிவ வழிபாட்டிற்கும், விஷ்ணு வழிபாட்டிற்கும், முருகனுக்கும், ஐயப்பனுக்கும், வழிபாடுகள் செய்து, ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும் இல்லத்தில் இரு வேளைகளில் விளக்கேற்றுவதும்,எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும் என்று நம்பப்படுகிறது.


கார்த்திகை மாதம்  சிறப்புகள் :


இம்மாதம் காந்தள் பூக்கள் அதிகம் பூக்கும். மேலும் கருமையான மேகங்கள் சூழ்ந்து இருக்கும் காலமாகவும் இருக்கும்.

கார்த்திகை மாதத்தில் திங்கட்கிழமைகளில் சிவ பெருமான் கோவில்களில் சோமவார சங்காபிஷேகம் மிகவும் விசேஷமானது.




கார்த்திகை மாத விசேஷ நாட்கள்:


நவம்பர் 17- திங்கட்கிழமை கார்த்திகை 01-பிரதோஷம்.

நவம்பர் 18 -கார்த்திகை 02- மாத சிவராத்திரி.

நவம்பர் 19- கார்த்திகை0 3- அமாவாசை.

நவம்பர் 23- கார்த்திகை 07- வளர்பிறை முகூர்த்தம் 

நவம்பர் 24 -கார்த்திகை 08- சதுர்த்தி.

நவம்பர் 26 -கார்த்திகை10 - திருவோணம் 

டிசம்பர் 01- கார்த்திகை15 - ஏகாதசி - வளர்பிறை முகூர்த்தம்.

டிசம்பர் 0 2- கார்த்திகை 16- பரணி தீபம்.

டிசம்பர் 03- கார்த்திகை 17- மகாதீபம்.

டிசம்பர் 04- கார்த்திகை18- பஞ்சராத்திர தீபம். கார்த்திகை பௌர்ணமி.

டிசம்பர் 8, 10, 14,15 - கார்த்திகை 22,24,28,29 -


தேய்பிறை முகூர்த்தம்.

 

நவம்பர் 28, டிசம்பர் 12- கார்த்திகை 12, கார்த்திகை 26- அஷ்டமி.

நவம்பர் 29, டிசம்பர் 13- கார்த்திகை 13, கார்த்திகை 27 - நவமி.


கார்த்திகை மாதத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வது மிகவும் பிரசித்தமானது. ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் தேதியில் இருந்து விரதத்தை தொடங்கி மாலை அணிந்து சபரிமலைக்கு சென்று பார்த்தசாரதியின் மைந்தன் ஐயப்பனை தரிசிக்க  செல்வார்கள். கார்த்திகை மாதம் முதல் தேதி துவங்கி மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அதிகாலையில் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். கார்த்திகை முதல் நாள் பக்தர்கள் மாலை அணிந்து கருப்பு,காவி அல்லது நீல  நிறம் கொண்ட ஆடைகள், துளசி மணிமாலை அணிந்து  விரதத்தை தொடங்குவார்கள்.


மேலும் இன்று சிவபெருமானுக்குரிய சோமவார பிரதோஷ நாளாக அமைந்துள்ளதால் ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிய,விரதம் மேற்கொள்ள சிறப்பான நாளாக அமைந்துள்ளது. இந்த நாள் வரும் ராகு காலம் மற்றும் எமகண்டம் தவிர்த்து மற்ற நேரங்களில் சபரிமலை செல்லும் பக்தர்கள் மாலை அணிவது சிறப்பு.


இந்தமாதம் மஹாலக்ஷ்மி வழிபாட்டிற்கும் உகந்தது மகாலட்சுமி கார்த்திகை மாதத்தில் தீபத்தின் சுடரில் வாசம் செய்வதால் தீப வழிபாடு  வீட்டில் மேற்கொள்வதால் அனைவருக்கும் சுபிட்சம் உண்டாகும்.


கார்த்திகை மாதத்தில் அனைவரும் அனைத்து நலங்களும்,வளங்களும் பெற்று வாழ்வோமாக. தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.