சின்னச் சின்னக் குழந்தைகளே
Oct 30, 2026,10:20 AM IST
- ம.ஈஸ்வரி, கரூர்
சின்னச் சின்னக் குழந்தைகளே
சிறகை அடிக்கும் குழந்தைகளே
வண்ண வண்ணக் குழந்தைகளே
வட்டமிடும் குழந்தைகளே
நல்ல கருத்தைக் கேட்டிடுவாய்
நாட்டை உயர்த்தப் பாடுபடு
நல்லன யாவும் செய்துவிடு
நன்றாய் வாழ்க் கற்றுவிடு
பெரியவர்க்குதவி செய்துவிடு
பெற்றோர் சொல்படி கேட்டுவிடு
ஆசான் காட்டும் வழியினிலே
அன்பாய் நாளும் நடந்துவிடு
தீயவர் நட்பை விலக்கிவிடு
நன்மை யாவர்க்கும் செய்துவிடு