தலையை கவிழ்ந்து.. தரையோடு உறவாடும் நெல்மணிகள்.....!

Su.tha Arivalagan
Feb 25, 2026,04:34 PM IST

- கஸ்தூரி நடராஜன்


வான் புகழ் கொண்ட

தமிழ் நாட்டில்.....! 

தமிழகத்தின் நெற்

களஞ்சியம் தஞ்சை..!


தஞ்சை தரணி யில்

தழைத்தோங்கும்

நெற்கதிர்கள்.....!


தலையை கவிழ்ந்து

தரையோடு உறவாடும் நெல்மணிகள்.....!




பச்சை பசேல்என

பச்சை பட்டு

விரித்தார் போல்

பசுமையான சோலை..... எங்கள்

பட்டுக்கோட்டை யில்

வானுயர்ந்து நிற்கும்

எம் பள்ளி....!


இந்நூற்றாண்டு

வரை இலச்சோப

இலச்சம் மாணவர்களை

பட்டம், பதவி சுமக்க

வைத்து, பல்வேறு

துறையில் உயர்த்தி

வைத்தது எம்பள்ளி..!


பசுமைகுன்று களாய்

மரங்கள்   அதில்

தவழும் தென்றல்

காற்றே எங்களின்

சுவாசக்காற்று....!


பட்டாம்பூச்சி யாய்

பறந்து திரியும்

வண்ண பூக்களே...!

எம்பள்ளி மாணவர்கள்....!


சுவைக்காத சுவையாய் ஆசிரியர்கள் கடலும்

அலையும் போல்

எங்களுக்கு ஓர்

பிரியா உறவு....!


கற்றலின் உயரம்

எட்டா  மலையே....!

இதில் ஏதும் 

இல்லை யே சரிவு...!


உரிமை யோடு

காட்டுவார்கள் பரிவு..!


உடலுக்கும் உள்ளத்துக்கும்...

பசுமையானசெறிவு.!


கற்றலும் கலையும்

பண்பாடு ம் நீண்ட

தூர  பயணம்..!

 

அதைவழிநடத்தும்

ஆசிரியரின்

ஆற்றலும், அணுகு

முறையும்.எங்களுக்கோர்  பெருமிதம்..!


கற்றல் என்பது

கடலென உணர்த்தும்....!

சிற்றறிவு அதனில்

பேரறிவு புகட்டும்..!

அறிவு தேடலை

ஆக்கபூர்வமாக்கும்

ஆசிரியர் எங்களுக்

கோர்  வரமே....!


தினந்தோறும்

நீங்கள் விதைக்கும்

வித்தே.....!

எங்கள் ஆளுமைக்

கோர் கெத்தே...!


கற்றலில் ஓர்புரட்சி..!

கட்டுரையில் ஓர் பயிற்சி....!

கற்றல் திறனில்

ஓர் வளர்ச்சி....!

மனதில் வேறூன்றியதே

நெகிழ்ச்சி...!


எங்கள் வளர்ச்சியின்  எழுச்சி...!

உங்கள் கற்பித்தலின்

சூழ்ச்சி....!


அற்புத வாழ்க்கைக்

கைக்கு .... அழகான

அடித்தளம் போடும்

ஆசிரியரால்....

எம்பள்ளி மாணவர்

களுக்கோ மகிழ்ச்சி..!


இந்நூற்றாண்டு

போல்  நூறு நூறு 

ஆண்டுகள்...!

நூற்றாண்டு விழா

வாக  உருவெடுக்க

வேண்டும்.. எம்பள்ளி..


நாட்டுக்கு அரன்

காவல்துறை...!

அன்பில் மகேஷ்

அய்யா அரனாக

இருந்து  ஆற்றும்

பணி யே  நம்

கல்வித்துறை...!


கல்வி வளர்ச்சி க்கு

கிளர்ச்சி யாய் இருந்து

செயல்படும் அரசுக்கும்

நம்பள்ளி சார்பாக

நன்றி... நன்றி...!


(பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் ஆசிரியர் கஸ்தூரி நடராஜன்  எம்.ஏ, பி.எட் . பட்டுக்கோட்டை அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தனது பள்ளி நூற்றாண்டு விழாவையொட்டி எழுதிய இந்தக் கவிதையை பாராட்டிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முதல்வரின் பார்வைக்கு இதை அனுப்புவதாக கூறியுள்ளார். மேலும் இந்தக் கவிதையைப் பாராட்டிய உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், கல்விக்கடலில் கடைந்தெடுத்த முத்தே.....! கற்றல் திறன் வளர்ச்சி யோ உங்களின் சொத்தே...! என்று பாராட்டிப் புகழ்ந்துள்ளார்)