Kavi Kalai poem: விதை

Su.tha Arivalagan
Apr 18, 2026,03:48 PM IST

- கவி கலை

 

வேர் முளைக்கும் வேளையில்  

என் வேதனை வெளிவரவில்லை, 

தளிர் தழைக்கும் நாளில் - என்  

தலை தூக்கியதில்லை, 

இலை துளிர்க்கும் நொடியில்- என் 

இறுமாப்பு துளிர்க்கவில்லை, 

கிளை விரியும் பொழுதில் - என் 

கிளர்ச்சி தெரியவில்லை, 




பூப் பூக்கும் அழகில்-என் 

புன்னகை அறியவில்லை, 

காய் காய்க்கும் காலத்தில்-என் 

கரிசனை எடுபடவில்லை, 

மண்ணோடு மண்ணாகக் கிடந்தாலும் 

மட்கிப் போய் வாழ்விழந்தாலும் 

மரமாக மறுபிறவி எடுக்கும் 

மறைந்தும் மடியாத விதை நான்.


(சொ.கலையரசி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். தாய் CBSE பள்ளி வேதியியல் ஆசிரியையாக 3 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக "எழுதுக" என்னும் புத்தகம் எழுதும் இயக்கத்தோடு இணைந்து எழுத்துப்பணியாற்றி வருகிறார். 1. புழுதிமண் கவிதைத்தொகுப்பு, 2. உடைந்தும் உருவெடு குறுநாவல் என இரு நூல்களைப் படைத்துள்ளார். இறையன்பு IAS முன்னிலையில் அவை வெளியிடப்பட்டன.)