Kaviarasi Poem: புத்தகம்!
- கவி. கலை
புத்தியினால் உட்கொண்டு
அகத்தினுள் நுழைந்ததால்
புத்தகம் ஆனாயோ?
உன்னுள் தான்
எத்தனை பூகம்பங்கள்?
எத்துனை புதுமைகள்
உன்னை கையில் ஏந்தினால்
என்னை விண்ணில் பறக்க வைக்கிறாய்.
உன்னை தொட்டு இரசித்தால்
என்னை சிகரம் தொடவைக்கிறாய்
உன்னை ஓரம் கட்டினால்
என்னை அறியாமையில் தள்ளுகிறாய்.
முதுமையின் துணையே !
தனிமையின் சுகமே.!
உனக்கு என் மென்மையான புரட்டல்
வலிக்கிறதா ?
எனக்கு வலிக்கிறது பக்கம் முடிகிறதே என்று.
(சொ.கலையரசி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். தாய் CBSE பள்ளி வேதியியல் ஆசிரியையாக 3 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக "எழுதுக" என்னும் புத்தகம் எழுதும் இயக்கத்தோடு இணைந்து எழுத்துப்பணியாற்றி வருகிறார். 1. புழுதிமண் கவிதைத்தொகுப்பு, 2. உடைந்தும் உருவெடு குறுநாவல் என இரு நூல்களைப் படைத்துள்ளார். இறையன்பு IAS முன்னிலையில் அவை வெளியிடப்பட்டன.)