மணக்கும் மலர்கள்.. மயக்கும் மழலைகள்!
- எம். கலைவாணி கோபால்
தேனில் ஊறிய நெல்லிக்கனிகள் எப்படி சுவையானதோ அதுபோலத்தான் குழந்தைகளும். குழந்தைகள் என்ற சொல்லே தேன் போன்றது. அப்படிப்பட்ட குழந்தைகளின் நாவில் குழந்தை வருகின்ற வார்த்தைகளின் வர்ணனைகள் தேனில் இருக்கும் நெல்லிக்கனியில் உள்ள இனிப்பு புளிப்பும் போல கேட்க கேட்க மனம் பூரித்து புத்துணர்ச்சியை தரும்.
(கரும்பு தரும் சுவை எனக்கு காட்டினை உன் கழல் இணைகள்) என்ற திருவாசகத்தின் வரிகளைப் போல நடராஜப் பெருமானின் பாதங்கள் மட்டும் அல்ல குழந்தைகளின் பாதங்களுமே சொர்க்கம் ஆகும்.
பூக்களின் வண்ணங்களும் நறுமணங்களும்:
"எந்த தேசத்து தேசத்தில் நீ பிறந்தாய் எத்தனை பேரழகா என்பது போல"எந்த தேசத்தில் குழந்தைகள் பிறந்திருந்தாலும் எந்த வண்ணத்தில் பிறந்திருந்தாலும் மலர்ந்த மலர்களை பார்க்கும்போது வரும் இனம் புரியாத உணர்வை போல அவர்களின் செயல்பாடுகளும் காற்றில் அசையும் பூக்களைப் போல ரசித்துக்கொண்டே இருக்கும் நம் விழிகள்.
கவரிமான்கள்:
இப்போதுள்ள குழந்தைகளுக்கு இல்லை, "வேண்டாம் என்ற வார்த்தைகள் மட்டும் கவரி மானின் குணங்களோடு ஒத்திருக்கும் அதை அவர்கள் ஏற்க மாட்டார்கள் . அதற்குக் காரணம் இன்றைய கட்டண கல்வி முறையும் நாம் நம் காட்டும் ஆடம்பரங்களுமே.
மூங்கிலின் வளர்ச்சி:
இன்றைய குழந்தைகளின் மூளைத்திறன் மற்றும் யோசிக்கும் திறன் மூங்கிலைப் போல வளர்ந்து கொண்டே இருக்கிறது அவர்களுக்கு இணையாக நம் செயல்பட முடியாது நம் தென்னை மரத்தில் குறிப்பிட்ட அளவை போல நின்று விடுகிறோம்.
அவர்களிடம் இன்றைய கட்டண கல்வி மற்றும் திணிக்கப்படாமல் இருந்தால் அவர்களின் வளர்ச்சி. குறிப்பாக, இந்திய குழந்தைகளின் வளர்ச்சி யாராலும் ஈடு செய்ய முடியாத அளவு மூங்கில் போன்று மேலோங்கி நிற்கும் நாளை இளைய தலைமுறையினர் தாங்கும் துண்களாக நிற்பார்கள்.
இன்று குழந்தைகள் தின விழா.. அனைத்து குழந்தைகளுக்கும் இனிய நல்வாழ்த்துகள்.
(எம்.கலைவாணி கோபால், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர். தடம் பதிக்கும் தளிர்கள் மையமும், தென்தமிழ் இணையதளமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி வகுப்பிலும் கலந்து கொண்டிருப்பவர்)