ருத்ர மந்திரத்தை மட்டுமே பற்றிக் கொண்டு .. சிவனை சென்றடைந்த.. ருத்ர பசுபதி நாயனார்

Su.tha Arivalagan
Jun 24, 2026,06:36 PM IST

- கலைவாணி கோபால்


'ருத்ர பசுபதிக்கும் அடியேன்'- சுந்தரமூர்த்தி நாயனார் .


அன்றைய சோழ நாட்டின்  தலையூர் அதாவது, இன்றைய திருத்தலையூரில் அந்தணர் குலத்தில் பிறந்தவர். அவ்வூரில் கோவில் கொண்டுள்ள பெருமானின் நாமம் சப்தரிஷ்ஸ்வரர், அம்பாளின் திருநாமம் குங்குமாம்பிகை.


ஆகாய மார்க்கமாக சென்ற ராவணன் அந்த ஊரில் சப்தரிஷிகள் அமர்ந்து யாகம் செய்வதை கண்டு அங்கு வர, சப்தரிஷிகள் அனைவரும் மருத மரமாக மாறி மறைந்தார்கள். பின்பு திருத்தவத்துறை என்னும் இடத்தில் சப்தரிஷிகள் தங்கள் தவத்தை பூர்த்தி செய்தனர்.


சப்தரிஷிகள் பூஜித்ததால் அந்த சிவலிங்கத்திற்கு சப்தரிஷீஸ்வர் என்ற பெயர் வந்ததாக  சொல்லப்படுகிறது. சப்தரிஷிகளை காணாத ராவணன் அங்கேயே அக்னி குண்டம் அமைத்து கடும் தவம் புரிந்தார்.


ராவணன் தவத்திற்கு பெருமான் மனம் இரங்காததால், "பங்கதவம் "என்னும்  கடுந்தவம்  புரிந்து "10" தலைகளை ஒவ்வொன்றாக வெட்டி அக்னியில் இட்டான் ஒன்பது தலைகள் தீக்கிரையாயின. பின் பத்தாவது தலையை வெட்ட சென்ற ராவணனை தடுத்து சிவபெருமான் காட்சி தந்ததால் ,அத்தலம் திருத்தலையூர் என்ற பெயர் பெற்றது என்றும் சொல்லப்படுகிறது.


ராவணனின் தலைகாத்த சிவபெருமான். அவருக்கு, "பரிவாதனி "என்னும் ஆயிரம் நரம்பு உள்ள வீணையினை கொடுத்ததும் அந்த வீணையை அற்புதமாக இசைத்து சிவபெருமானை துதி பாடியதும்.அந்த இடத்திலேயே தான். அந்தணர் குலத்தில் ஞானச் செல்வராக பிறந்த பசுபதி நாயனார். சிறுவயதிலேயே சிவபக்தியில் திலைத்திருந்தார்.




அவருக்கு உரிய காலத்தில் உபநயனம் சேவிக்கப்பட்டது. அதாவது ,அகத்தில் உள்ள சுடர் இதன் மூலம் மேலும் ஜொலிக்க வைத்தது. தொடர்ந்து வேத "அத்யயனம்"   பயிற்றுவிக்கப்பட்டது.    பிறவியிலேயே ஞானமும் சிவபக்தியும் ஒரு சேர வாக்கப் பெற்ற பசுபதி நாயனார். வேதம், உபநிஷத்துக்கள் ,செவி வழியாக கற்றார்.இவற்றை எழுதி படிக்க இயலாது.


அதுமட்டுமல்லாமல், முற்பிறவியின் பயனாகவே.... இவருக்கு ஞானம் மிக எளிதாகவே கிடைத்தது .அதிலும் 'யஜுர் 'வேதத்தின் "தைத்ரீய ஸம்ஹிதையின்"  மையமாக இருந்த ஸ்ரீ ருத்ர' மந்திரத்தை கற்கும் போது அவர் மனம்  ..இனம் புரியாமல் 'ருத்ரம்' மந்திரத்தில் மட்டுமே  திளைத்தது.


('ருத் 'என்றால் துன்பம்.'திரன்' என்றால் அதை நீக்குபவர் என்று பொருள்.)


ஸ்ரீ ருத்ர மந்திரங்களை உச்சரிக்கும் போது எழும் ஆற்றல் மிக சக்தி வாய்ந்தது. ஆலகால விஷத்தை உண்டா ருத்ரனை போல நம்மைச் சுற்றியுள்ள தீய அதிர்வுகளை அம் மந்திரம் ஆனது அழித்து நல்ல கர்மாவிற்கு வழிவகுக்கும். யானையின் துதிக்கை பற்றிய சங்கிலியைப் போல ,பசுபதியாரின் மனம் ஸ்ரீ ருத்ரத்தை மட்டுமே பற்றி இருந்தது .ஸ்ரீ ருத்ரம் விவரிக்கும் சிவசொரூபத்தில் எந்நேரமும்  நிலைத் த்திருந்தார். மந்திரம் ஒலியில் தொடங்கியது .என்பதை எல்லா மதமும் ஒப்புக்கொள்ளும் விஷயம். 


அதேபோல் ,ஸ்ரீ ருத்ர மந்திரம் சிவனுக்கு உகந்தது .அதை ஜெபித்தால், சிவபெருமானின் அருட்கடாசத்தைப்பெற முடியும். என்று எண்ணி அனுதினமும் நெடுநேரம் "ஸ்ரீ ருத்ரம்" மந்திரத்திலே இருந்து வந்ததால், அவரின் பார்வை அந்தர் முகமானது. ஸ்ரீருத்ரம் சொல்லும் மனது உலகத்தில் இருந்து விலக ஆரம்பித்தது.


அந்தணர்கள் காலையில் ஆலயங்களில் வேதம் ஓதி முடிந்த பின் குடும்பங்களுக்காக தானம் பெறுவதற்காக வெளியில் சென்று தானம் பெறுவார்கள். ஆனால், ருத்ர பசுபதி யாரோ?" ஸ்ரீ ருத்ரம்" மந்திரத்தில் மூழ்கி தானம் பெறுவதையும் மறந்தார்.


இவரின் இந்த செய்கை மற்ற அந்தணர்களிடம் இருந்து இவரை விலகச் செய்தது. அது மட்டுமல்லாமல், ஆலய குளக்கரையிலே தன்னை மறந்து' ருத்ர' மந்திரத்தை மட்டுமே காதலால் ஓதி இரவும், பகலும், குளக்கரையிலே கழுத்தளவு நீரில் நின்று இரு கைகளையும் கூப்பி 'ஸ்ரீ ருத்ர' மந்திரத்தை தன்னை மறந்து ஜெபிக்க ஆரம்பித்து விட்டார். 


தன்னை மறந்து பெருமானின் மந்திரத்தை மட்டுமே நினைவில் ஓதியவருக்கு அவர் என்ன செய்கிறோம். என்ற நினைவே இல்லாமல் போனது. அப்போதுதான் புரட்டாசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தன்று பெருமாள் இவருக்காக காட்சி கொடுத்து இவரை தன்னிடத்தில் ஆட்கொண்டார். 


இவர் ஆலயம் ஆலயமாக செல்லவில்லை. மந்திரங்கள் அவ்வளவு இருந்தும்" ருத்ர மந்திரத்தை" மட்டுமே பற்றி கொண்டு பெருமானை, அடைந்த 63 நாயன்மார்களில் சிறப்புக்குரியவர்  ருத்ர பசுபதி நாயனார். திருத்தலையூரில் உள்ள சப்தகிரிஷ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் இவருக்கு சிறப்பாக ருத்ர மந்திரங்கள் ஜெபிக்க குரு பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது.