"வள்ளி பத்திரமா வீட்டுக்கு போ... பயப்படாத".. (கோடாங்கி.. திகில் தொடர்-4)
- கவிஞர் க.முருகேஸ்வரி
பிள்ளையாரப்பா.... பிள்ளையாரப்பா ...... என் பிள்ளைய காப்பாத்திட்டியாப்பா..... என்றவாறே அருகில் இருக்கும் பிள்ளையாரிடம் ஓடிப் போய் தன் நன்றியை கண்ணீராக்கிக் காணிக்கை செலுத்திக் கொண்டு இருந்தாள் ராமாயி.
அவளிடம் சென்ற காமாட்சி... கவலைப்படாத ராமாயி... வள்ளிக்கு தான் ஒண்ணுமில்ல... அது நல்லா இருக்கு .. நாளைக்கு வந்துரும்னு சொல்றாங்கள்ள... அப்புறம் என்ன உனக்கு,...
வா எந்திரி.. .காலைல இருந்து பச்சத்தண்ணி கூட பல்லுல படல....உனக்கும் உடம்பு சரியில்ல.நீ நல்லா இருந்தா தான வள்ளிய பார்த்துக்க முடியும்....எந்திரிச்சு வா ராமாயி.... கம்மங்கூழு கரைச்சி தாரேன்.தொண்டைய லேசா நனைச்சிக்க என்றாள்....
காமாட்சி ராமாயி வீட்டுக்கு பக்கத்து வீடு. பதினாறு வயதினிலே... படத்தில காந்திமதியுடன் மல்லுக்கட்டி உருளும் அதே கேரக்டர் . இரண்டு பேரும் வருசத்துக்கு ஒரு முறை இந்தக் காட்சியை கள்ளிப்பட்டியில் நடத்திக் காட்டுவார்கள்...
மறுநாள் காலையில் காமாட்சி கம்மல் சொரையக் காணோம்னு வாசல்ல தேடிக்கொண்டிருப்பா.
இல்லேனா மூக்குத்தி ஒடிஞ்சிடுச்சனு மூக்கால அழுதுக்கிட்டு இருப்பா ....
ராமாயி ஒரு வாரம் கழிச்சு தான் வலியில வந்த காய்ச்சல் சரியாகி வெளிய தல காட்டுவாள்...
தூரத்தில் ஏதோ ஒரு மிருகத்தின் உறுமல் சத்தமும்,ஊளையிடும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருந்தது...... கையை நீட்டியவாறு ராசாத்தி சரிந்து விழுந்தாள்
கறுத்த முகம்... உடம்பெல்லாம் காயம்....கலைந்த தலை....யாரம்மா நீ..... கணேசன் கேட்டார்...
கணேசனின் கேள்விக்கு சிறுமியிடமிருந்து பதில் வரும் என்று வள்ளி நினைத்தாளோ என்னவோ..... சிறுமியைப் பார்த்தாள்,...
சிறுமியின் சிரிப்பு சத்தம் மட்டுமே அவளுக்குக் கேட்டுக் கொண்டு இருக்கிறது. சிறுமியைக் காணவில்லை.
வள்ளி வள்ளி பத்திரமா வீட்டுக்கு போ... பயப்படாத... என்ற சிறுமியின் வார்த்தைகளும் அவள் காதில் வந்து விழுந்தன. வள்ளியின்
கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.
நம்ம ஆளுங்க ரெண்டு பேரு அங்க போயிருக்காங்கப்பா கருப்பையா... எப்டினாலும் நாளைக்கு விடியற்காலையில வந்திருவாங்கனு நினைக்கிறேன்... வந்ததும் தகவல் சொல்றோம்ப்பா...பிள்ளைய வந்து கூட்டிட்டுப் போங்க...மத்த விசயத்த அப்பறம் பேசிக்கலாம்...இந்தப் பயல ஸ்டேசன்ல விட்ருங்க...அவக வீட்டாளுங்களுக்கு தகவல் சொல்லிடுங்க....
யாத்தா.. ராமாயி கவலைப்படாத தாயி.. பயப்படாம வீட்டுக்கு போ...நாளைக்கு உன் பிள்ள வந்துடும் னு சொல்லிக்கொண்டே யாரோட பதிலையும் எதிர்பாராமல் புல்லட்டை உதைத்து புறப்பட்டார் வீரன்.
போலீஸ்காரங்களும் மனிதர்கள் தான்....அவர்களுக்குள்ளும் ஈரம் இருக்கிறது என்பது ராமாயியிடம் வீரன் கரிசனையோடு பேசியதன் மூலம் நிரூபணமானது.
ஊர் மக்கள் அனைவரும்அப்பாடா... என்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்,அடுத்த நடக்க இருக்கும் ஆபத்து என்னவென்று தெரியாமல்...
வாத்தியாரே கொஞ்சம் இங்கிட்டு வாங்க...
நான் போய் யார்னு பார்க்குறேன்னு சொல்லி விட்டு அந்த உருவத்தை நோக்கி நடந்தான் சங்கையா... தன்னிடமிருந்த டார்ச்சை அடித்து வள்ளியின் முகத்தை உற்றுப் பார்த்தான்...
யாரது....யாரது... வள்ளியாட்டம்ல இருக்கு...
ஆமாம்...வள்ளி தான்.
வள்ளி வள்ளி நீ எப்படி நீ எப்படிமா இங்க வந்த? என்று கேட்டுக்கொண்டே வள்ளியின் அருகில் சென்றான்.
வாத்தியாருக்கு ஒன்றும் புரியவில்லை.
சங்கையா...யாருப்பா இந்த வள்ளி? உனக்கு தெரிஞ்ச பிள்ளையா? என்று வாத்தியார் சங்கையாவிடம் கேட்டார்.
சங்கையா வள்ளி அருகே சென்றான். வாத்தியாரே வள்ளி வள்ளி.....
வள்ளி யாரென்று கூற ஆரம்பித்தான்....
(பேய் வரும்)
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).