குமரேசனாய் பிறந்து.. இமயம் முதல் குமரி வரை போற்றிய .. கொடி காத்த குமரன்!
- சிவ.ஆ. மலர்விழி ராஜா
குமரேசனாய் பிறந்து.,...
இமயம் முதல்
குமரி வரை.....,.
இந்திய தேசம்
போற்றிய ......
திருமகனாம்
திருப்பூர் குமரன்......
வறுமையின்
பிடியில் வாழ்ந்த மகன்.....
தமிழ்த்தாய்
ஈன்றெடுத்த......
செங்கோல் நாயகன்...,.!
ஈடில்லா தமிழ்
மண்ணின் ....
மாசற்ற மைந்தன்.....
இந்திய தேசத்தின்
காவிய தலைவன்......
உயிரினும் மேலான
தேசிய கொடியை.....
உயிர் போன பின்னும்....
உயர்த்திப் பிடித்த மாவீரன்.......
அடி பல பட்டாலும்
வலிகள் தாங்கி ...
இடிதாங்கி
போல்......
வந்தே மாதரம் ....!
என்ற பொன்மொழியை உதிர்த்து.....
உயிர்த்தியாகம் செய்து....
நம் இதயம் தொட்ட
இணையற்ற வீரன்.,.....
கொடிபிடித்து உயிர்
விடுத்த .....
கொடிகாத்த குமரன்......
இந்நாளில் அவரது மலர்பாதம்
பணிந்து
வணங்கிடுவோம்.....
வாழ்க பாரதம்.....!
வளர்க செந்தமிழ்......!
வந்தே மாதரம்......!
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)