Short Story: கோமாளி!

Su.tha Arivalagan
Jul 20, 2026,03:07 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


உத்தமன் தன் ஐந்து வயது மகள் வானதியின் விரல் பிடித்து குடியிருப்பு வளாகத்தின் குளக்கரை ஓரம் நடந்து கொண்டிருந்தான். வானத்தில் பூரண நிலவு ஒளிர்ந்து கொண்டிருந்தான். 


'அப்பா!  இந்த நிலவைப் பிடித்து தாங்கப்பா' என்று கேட்டாள். 'அது எப்படிம்மா முடியும்? வானத்தில் இருக்கும் நிலா நம் கையில் எப்படி வரும்' என்று வினவ; குழந்தை சிணுங்க; கையினால் நிலாவைப் பறித்து எடுப்பது போல் பாவித்து, குழந்தை கையில் கொடுப்பது போல் நடித்தான். 


'போங்க அப்பா! உங்க ஃபோனைக் கொடுங்க! நான் பிடிச்சுடுவேன் பாருங்க; என்றவள். தொலை பேசியில் நிலவை படம் எடுத்து, தன் அப்பாவிடம் காண்பித்து' அப்பா! இதோ பாருங்கப்பா! நல்லா பாருங்க! நிலா இப்போது என் கையில் தானே இருக்கிறது; என்று குதூகலிக்க; உத்தமன் தன்னை ஒரு கோமாளியாக உணர்ந்தான். 




தன்னை அசடாக்கிய வானதியை கட்டித் தழுவி முத்தமிட்டு, பெருமிதம் அடைந்தான். தனக்கு ஏன் இந்த யோசனை தோன்றவில்லை; என்ற நினைப்புடன்.


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)