எனை ஆள்பவனே

Su.tha Arivalagan
Sep 04, 2026,12:39 PM IST

- செ.சாந்தி சின்னத் தம்பி, மதுரை


சின்னஞ்சிறு பாதம் எடுத்து 

சின்னக் கையில் குழலெடுத்து  


நாதமழை நீ தொடுத்து 

நல்லிசையில் உளங்களைச் சேர்த்தெடுத்து 


ஆட்டுவிக்கும் சின்னக் கண்ணனே!

அடி மீது அடிவைத்து 


அடுத்தவர்வீட்டு உறியில் கண் வைத்து 

திரண்டிருக்கும் வெண்ணெயைத் திருடும் கள்வனே ...


ஆடுகின்ற நதியினிலே 

பாடுகின்ற மங்கையரின் 




மேலாடை பறிக்கும்

மாயக்கண்ணனே...


தீமைகளை வதம் செய்து நன்மையை நிலைநாட்ட 

நற்கருணை கொண்டு காப்பவனே!


தீராத காதலை ராதையிடம் தந்து விழி நீர் சிந்திய அன்பனே ....


விதியின்  விளையாட்டில் கடவுளும் வீழ்வானென

உலகிற்கு உணர்த்திய மன்னனே ....


பல்வகை அவதாரம் பார்த்தவனே...

இந்தப் பெண் மனதையும் அறிந்து ஆள்பவனே...


காத்திடுவாய் சேர்த்திடுவாய் உன் பதம் மலரில் ....!


(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4.  சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)