என் தமிழ்.. ஏன் தமிழ்?

Su.tha Arivalagan
Sep 21, 2026,01:39 PM IST

- கவிஞர் கா. சா. ஷர்மிளா


அமுதுக்கு ஒப்பாக 

உயிருக்கு நிகராக

ஆதி முதல் அந்தம் வரை 

தரணியில்அகத்தியரால் வளர்ந்த தமிழே...


ஆண்டாண்டு காலமாய் ஆளும் தமிழே..

 

இலக்கியங்களில் சிறந்து காப்பியமாக நின்றவளே...


ஈரடி குறளாலே இவ்வுலகை வலம் வருபவளே..




எங்கும் இனிமை எதிலும் செழுமை ..

அனைத்திலும் வளமை

கவிகளுக்குப் புலமை

என் தமிழே.


எந்த மொழியிலும் இல்லா 

தமிழனுக்கு அடையாளமாக பண்பாட்டுக்கு சான்றாக.. 

எண்ணங்களின் கோர்வையாக..

கருத்துக்களை வெளிப்படுத்தும் களமாக 

காதல் உணர்வு பொங்கும் மொழியாக...

தேனினும் இனிய என் தமிழே.


வள்ளுவனை வான்புகழ செய்ததும் தமிழே

கம்பன் கவிபாட உதவியது  தமிழே..

மகாகவியாக பாரதியை உயர்த்தியது தமிழே..

பாரதிதாசனை பாவேந்தராக உயர்த்தியதும் தமிழே... 

கண்ணதாசனை கவியரசன் ஆக்கியதும் தமிழே..


அன்றும் இன்றும் என்றும் தெவிட்டாத  செந்தமிழே..


என்னுள் என்னைக் காண வைத்த தமிழே..

என் எண்ணங்களை வரி வடிவமாக ஒளிரச் செய்த தமிழே...

என் இதயநாளங்களை வீணை மீட்டிய தமிழே..


ஏன் தமிழ் ஏன் தமிழ் என அடுக்கடுக்காக சொல்ல.. 

தேன் தமிழ் தேன் தமிழ் என்று கேட்குமே..


இத்தரணியில் எத்தனை மொழிகள் இருந்தாலும்.. 

தமிழைப் போல் இனிய மொழி எங்கும் காணோம்..


 வாழ்க தமிழ். வளர்க தமிழ்..


(கா.சா.ஷர்மிளா, ஆசிரியர், புவனகிரி, கடலூர் மாவட்டம்.  வீரத்தமிழரசி வேலுநாச்சியார் இலக்கிய சமூக இயக்கம்- புதுவை, கடலூர் மாவட்ட பொறுப்பாளர்)